search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தட்டச்சு தேர்வு"

    • மொத்தம் 1278 மாணவ, மாணவிகள் தட்டச்சுத் தேர்வை எழுதினர்.
    • தேர்வை பறக்கும்படைத் தலைவர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    2023ம் ஆண்டிற்கான வணிகவியல் தட்டச்சுத் தேர்வு கடந்த இரண்டு நாட்களாக கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. நேற்று முன்தினம் இளநிலை மாணவ, மாணவிகள் 498 பேருக்கும், முதுநிலை மாணவ, மாணவிகள் 241 பேருக்கும் தேர்வுகள் நடந்தன.

    நேற்று இளநிலை தேர்வை 302 பேரும் முதுநிலை தேர்வை 224 பேரும், முன் இளநிலைத் தேர்வை 13 பேரும் என மொத்தம் 1278 மாணவ, மாணவிகள் தட்டச்சுத் தேர்வை எழுதினர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை முதன்மை கண்காணிப்பாளர் சுப்பையா மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் ரத்னா தேவி, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். தேர்வை பறக்கும்படைத் தலைவர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தட்டச்சு பள்ளியில் ஆங்கிலம் இளநிலை பாடம் பயின்ற மோனிஷா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • மோனிஷா தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஆண்டிபட்டி:

    தமிழகத்தில் மாநில அளவிலான தட்டச்சு தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் 4 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    இதற்கான முடிவுகள் இணையதளம் மூலம் வெளியானது. இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தட்டச்சு பள்ளியில் ஆங்கிலம் இளநிலை பாடம் பயின்ற மோனிஷா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இதனையடுத்து மாணவிக்கு பயிற்சி மைய நிர்வாகி மற்றும் சக மாணவிகள் இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த பயிற்சி மையத்தின் மூலம் கலந்துகொண்டு தேர்வு எழுதியவர்களில் 131 பேர் சிறப்பு முதல் வகுப்பிலும், 62 பேர் முதல் வகுப்பிலும், 21 பேர் 2-வது வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • தொடரும் குளறுபடியால் தட்டச்சு தேர்வு நாளை நடக்குமா என தேர்வர்கள் தவிக்கின்றனர்.
    • தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் தட்டச்சு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 24, 25 ஆகிய நாட்களில் நடக்கும் என தொழில்நுட்ப கல்வி த்துறை அறிவித்திருந்தது. ஆனால் பழைய நடைமுறை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடப்பட்டதால் தேர்வுகள் அப்போது ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது பெய்த தொடர் மழை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (26-ந் தேதி) மற்றும் 27-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பொதுவாக ஹால்டிக்கெட்டுகள் தட்டச்சு பயிற்சி மையம் மூலம் வழங்கப்படும். ஆனால் தற்போது வரை ஹால் டிக்கெட்டுகள் வராததால் நாளை தேர்வு நடக்குமா? என்று தேர்வர்கள் பரிதவிப்புக்கு ள்ளாகின்றனர்.

    • அரசு தொழில்நுட்பத்துறை கல்வி இயக்ககம் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
    • தட்டச்சு செய்யும் முதல் தாள் இரண்டாவதாகவும், அறிக்கை தட்டச்சு செய்யும் இரண்டாவது தாள் முதலாவதாகவும் நடத்தப்படுகிறது.

    விருதுநகர்:

    தட்டச்சு தேர்வினை நடத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த உத்தரவிட்டார். இதனை ஆட்சேபித்து திருச்சியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அதில் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கனவே 2021-ல் புதிய முறைப்படி நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை வருகிற நவம்பர் 13-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் என அரசு தொழில்நுட்ப கல்வித்துறை இயக்ககத்திற்கு உத்தரவிட்டனர்.

    மேலும் இதுதொடர்பான அறிக்கையை நவம்பர் 14-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இந்நிலையில் அரசு தொழில்நுட்பத்துறை கல்வி இயக்ககம் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி விரைவாக தட்டச்சு செய்யும் முதல் தாள் இரண்டாவதாகவும், அறிக்கை தட்டச்சு செய்யும் இரண்டாவது தாள் முதலாவதாகவும் நடத்தப்படுகிறது.

    ×