search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெலிவரி ஊழியர் கைது"

    • ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார்.
    • இளம்பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார்.

    பெங்களூரு:

    பெங்களூரு தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏ.இ.சி.எஸ். லே அவுட் பகுதியில் வசித்து வரும் 30 வயது இளம்பெண் ஒருவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் தோசை ஆர்டர் செய்தார்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஆகாஷ் (27) என்பவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த தோசையை மாலை 6.45 மணி அளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார். இதையடுத்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து ஆகாஷிடம் கொடுத்தார்.

    இதையடுத்து தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் தண்ணீர் கேட்டார். இதனால் அந்த பெண் தண்ணீர் கொண்டு வர சமையலறைக்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற ஆகாஷ் திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார். உடனே ஆகாஷ் படிக்கட்டு வழியாக இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு தென்கிழக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆகாஷ் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி உணவு டெலிவரி செய்து வருவதும், இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்தவர் என்பவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.

    ×