search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்னிஸ்"

    • 2003ம் ஆண்டு பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
    • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் 3வது இடத்தில் உள்ளார்.

    சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பைக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    2003ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 ஆஸ்திரேலிய ஓபன், 1 பிரெஞ்ச் ஓபன், 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் தனது முக்கிய போட்டியாளர்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    தனது ஓய்வு முடிவு குறித்து கூறி உள்ள பெடரர், 'கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற கடுமையான சவால்கள் இருந்தன. இதனால் முழுமையான உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்ப கடுமையாக உழைத்தேன். ஆனால் என் உடல் திறன் குறித்து எனக்குத்தான் தெரியும்' என்றார்.

    • தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார்.
    • ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

    சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.

    முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடக்கிறது.

    இதன் தகுதி சுற்று போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் இந்தியாவின் சாய்சமர்தி, லட்சுமி பிரபா, சவ்ஜன்யா பவி செட்டிரியா பாட்டியா ருதுஜா போசாலி உள்பட 24 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    2 சுற்றுகள் கொண்ட தகுதி சுற்று முடிவில் 6 வீராங்கனைகள் பிரதான சுற்றுக்கு முன்னேறுவார்கள். தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சமர்தி, தனது முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நாவ் ஹிபினோவுடன் மோதினார். இதில் சாய் சமர்தி 1-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஓலிவியா டிஜென்ட்ரா முலியா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கசியோனோவாவை தோற்கடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் சவ்ஜன்யா பவிசெட்டி, ஜப்பானின் கியோகா ஓஹமுகரவுடனும், லட்சுமி பிரபா ஜப்பானின் யுகி நைய்டோவுடனும் மோதினர்.

    • இறுதி போட்டியில் கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.
    • பெண்கள் பிரிவில் கார்சியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் 4-ம் நிலை வீரரான கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் கோரிச் 7-6 (7-0), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். தரவரிசையில் 152-வது இடம் வகிக்கும் கோரிச் முன்னணி வீரர் சிட்சிபாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்)-பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) மோதினர். இதில் கார்சியா 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

    கார்சியா தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றை அடைந்து தற்போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடந்தது.
    • சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடந்தது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டி நடைபெற்றது.

    அடுத்து சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது.

    ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடா ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்த போட்டி நடைபெற்றது.

    21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 2018-ம் ஆண்டு இந்த போட்டி மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ந்தேதி வரை இந்த போட்டி ஒரு வாரம் நடக்கிறது.

    விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தது. தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவரும், முன்னாள் வீரருமான விஜய் அமிர்தராஜ் கூறியதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடுத்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மகளிர் டென்னிஸ் போட்டி தொடரை வெற்றிகரமாக நடத்த ஆர்வமாக உள்ளோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மகளிர் டென்னிஸ் பிரபலமாகவும், வளர்ச்சி அடையவும் இந்த போட்டி உதவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சோனி டெலிவிஷன் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
    • காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் முன்னணி ஜோடியை சானியா மிர்சா ஜோடி வீழ்த்தியது.

    ஒட்டாவா:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

    நேற்று முன்தினம் நடந்த முதல்சுற்றில் சானியா- மேடிசன் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய-அமெரிக்க ஜோடி, ரஷியாவின் முன்னணி வீராங்கனைகள் வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் எலிஸ் மெர்டென்சை இன்று எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சானியா- மேடிசன் ஜோடி 3-6, 6-4, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது.
    • சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பதால் விலகியதாக நடால் தகவல்

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார்.

    இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார்.

    போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்த நடால் கூறும்போது, துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

    காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால்.

    ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    துபாய் டென்னிஸ் காலிறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தார். #Halep #DubaiOpen
    துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் எலீனா ஸ்விடோலினா 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் நவரோவாவை (ஸ்பெயின்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு கால்இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை சுவிட்சர்லாந்தின் பென்சிக் 4-6, 6-4 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் பிலிஸ்கோவாவை தைவானின் ஹஷ்யேயை தோற்கடித்தார். இதேபோல் அரைஇறுதிக்கு குவிட்டோவா (செக்குடியரசு) தகுதி பெற்றார்.
    பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தி நிஷிகோரி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். #Nishikori
    பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஒன்றில் 6-ம் நிலை வீரரரான கிரிகோர் டிமிட்ரோவ் ஜப்பானைச் சேர்ந்த கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். இதில் 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார் நிஷிகோரி.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜெரேமி சார்டி யசுடாக்கா உசியமாவை எதிர்கொண்டார். இதில் சார்டி 6-4, 3-6, 7(7) - 6(4) வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் மெட்வெதேவ்- ரயோனிக், டிசோங்கோ- டி மினாயுர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக ரபேல் நடால் விலகிய நிலையில், முர்னே 2-வது சுற்றில் ஆட்டமிழந்து வெளியேறினார். #Nadal #Murray
    பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபேல் நடால் நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று 2-வது சுற்றில் ஜோ-வில்பிரைட் டிசோங்காவை எதிர்கொள்ள இருந்தார். கடைசி நேரத்தில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடும்போது நடாலுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் தற்போதுதான் களம் இறங்க தயாரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் முர்ரேயும் காயத்திற்குப்பின் பிரிஸ்பேன் தொடரில் களம் இறங்கினார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற முர்ரே 2-வது சுற்றில் 4-வது இடத்தில் இருக்கும் டேனில் மெட்வேதேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
    சென்னையில் நடந்த அகில இந்திய வீல்சேர் டென்னிஸ் போட்டியில் கர்நாடகா வீரர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
    மெரினா ஓபன் அகில இந்திய ரேங்கிங் வீல்சேர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது.

    இதன் ஒற்றையர் பிரிவில் கர்நாடகா வீரர் சேகர் வீராசாமி சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 6-4, 7-5 என்ற கணக்கில் தமிழகத்தை சேர்ந்த பாலச்சந்தரை தோற்கடித்தார்.

    பெண்கள் பிரிவில் பிரதிமா ராவ் (கர்நாடகா), வெற்றி பெற்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் சேகர் வீராசாமி- பாலச்சந்தர் ஜோடியும், பெண்கள் இரட்டையரில் பிரதிமா- ஷில்பா ஜோடியும் வெற்றி பெற்றது.

    பரிசளிப்பு விழாவில் ஆக்கி ஒலிம்பியன் வி.பாஸ்கரன், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவன சி.எஸ்.ஆர், தலைவர் பனீஷ்ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×