search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராவல்ஸ்"

    • அவசரமாக எனக்கு ரூ.5 ஆயிரம் தேவைப்படுகிறது.
    • தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 35).

    டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரிடம் பேராவூரணி பகுதியை சேர்ந்த நிஷாந்தினி (30) என்பவர் நான் ஒரு டாக்டர்.

    சென்னைக்கு அவசரமாக செல்ல வேண்டியுள்ளது.

    கார் வாடகைக்கு வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து யோகராஜ் காரில் மேரிஸ் கார்னரில் இருந்து நிசாந்தினியை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

    அப்போது நிஷாந்தினி முதலில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார் .

    அதன்படி யோகராஜ் காரை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டி சென்றனர். அங்கு காரை விட்டு இறங்கிய நிஷாந்தினி எனக்கு தெரிந்தவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

    அவசரமாக எனக்கு ரூ.5000 தேவைப்படுகிறது.

    அவரை பார்த்துவிட்டு உடனே வந்து விடுவேன்.

    அதன் பிறகு சென்னைக்கு செல்லலாம்.

    செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டு செல்போன் செயலி மூலம் உங்களது எண்ணுக்கு பணத்தை திருப்பித் அனுப்பி விடுகிறேன் என யோகராஜிடம் கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய அவர் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.

    அதை வாங்கிக் கொண்டு நிசாந்தினி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்வது போல் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த யோகராஜ் பல இடங்களில் தேடிப் பார்த்தார்.

    கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்ப ட்டோம் என்பதை உணர்ந்தார்.

    இது குறித்த அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த நிசாந்தினியை கைது செய்து விசாரித்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் நிஷாந்தினி டாக்டர் கிடையாது என்பதும், திருச்சியிலும் ஒருவரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் வேறு எங்காவது இது போல் நூதன முறையில் பண மோசடிகளில் ஈடுபட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரில் குழந்தைகளை அடைத்து வைத்து விட்டு விஷம் குடித்தனர்
    • ஆரல்வாய்மொழி போலீசார் 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் புகழ்பெற்ற தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் கார் மற்றும் வாகனங்களில் குடும்பத்தினருடன் வந்தும் பலர் பிரார்த்தனை செய்து செல்வார்கள்.

    எனவே தேவாலயத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்றும் வழக்கம் போல தேவாலயத்திற்கு ஏராள மானோர் வந்திருந்தனர். இதனால் கார்களும் அங்கு அதிகமாக நின்றன.

    இதில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்றது. இருப்பினும் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தவழியே சென்றவர்கள், கார் அங்கேயே நிற்பதை பார்த்துள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், காருக்குள் பார்த்தபோது, 2 குழந்தைகள் மட்டும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. வேறு யாரும் இருக்கிறார்களா? என காரை சுற்றி வந்து பார்த்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் காருக்கு வெளியே பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 2 பேர் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த ஆணின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்தபோது, அதில் அவரது டிரைவிங் லைசென்சு இருந்தது. அதன் மூலம் அவரது பெயர் ஆேராக்கிய சூசைநாதன் (வயது 35) என்பதும் கடிய பட்டணத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து, அதில் இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்த போது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் மாயமான தகவல் கிடைத்தது. எனவே பிணமாக கிடந்த பெண் அவரது கள்ளக்காதலி என தெரியவந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் கடியபட்டணத்தைச் சேர்ந்த சகாய சாமினி (30) என்பது உறுதியானது. 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் 2 பேர் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து விட்டு, காரில் இருந்த 2 குழந்தைகளையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்கள் சகாய சாமினியின் மகன்கள் என தெரியவந்தது.

    கள்ளக்காதல் ஜோடி தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    ஆேராக்கிய சூசைநாதன், சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி உள்ளார். மேலும் அவரே கார் டிரைவராகவும் செயல்பட்டுள்ளார். அவருக்கு வின்சா என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் தான், ஆேராக்கிய சூசைநாதனுக்கு அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி சகாய சாமினியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காத லாக மாறியுள்ளது. மீன் பிடி தொழிலாளியான ராஜேஷ் கடலுக்குச் சென்றதும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதுபற்றி தெரிய வந்ததும் இரு வீட்டா ரும் கண்டித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் சகாய சாமினி தனது 2 மகன்களுடன் மாயமாகி விட்டார். இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சகாய சாமினி மற்றும் அவரது மகன்களை தேடி வந்தனர்.

    இந்த சூழலில் தான் கள்ளக்காதல் ஜோடியினர், ஆரல்வாய்மொழி பகுதியில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் தென்னை மரத்திற்கு வைக்கும் குருணை மருந்தை குடித்து தற்கொலை செய்து உள்ளனர்.

    ×