search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள்"

    • விழுப்புரத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    • முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சேவையினை சிறப்பான முறையில் மேற்கொண்டனர்.

    விழுப்புரம்:

    தேசிய மருத்துவர் தினத்தினை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் மருத்து வர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சேவை யி னை சிறப்பான முறையில் மேற்கொண்ட மரகதம் மருத்து மனையின் மருத்து வர் தியாகராஜன் மற்றும் விழுப்புரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் பணிபுரியும் டாக்டர் கவாஸ்கர் ஆகியோரை கவுர வித்து பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முண்டி யம்பாக்கம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, துணை முதல்வர் சங்கீதா, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) பொற்கொடி, நிலைய மருத்துவ அலுவலர் (பொ) வெங்கடேசன், விழுப்புரம் நலப்பணிகள் இணை இயக்குநர், அலுவலக தேசிய நலக்குழும ஒருங்கிணைப்பு அலுவலர் ரகுநாத், விழுப்புரம் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவ லக நிருவாக அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் இளங்கோவன் மற்றும் மாவட்ட காப்பீட்டுத் திட்ட விஜிலன்ஸ் அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    செந்துறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததை கண்டித்து நோயாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. 2010-ம் ஆண்டு 150 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆனால் 24 மணி நேர மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களும் ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. 

    இதனால் இந்த மருத்துவமனை 24 மணி  நேரமும்செயல் படாமல் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் போன்று செயல்பட்டுவருகிறது.  அரசு போதிய டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 

    ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனகூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தாலுக்கா முழுவதும் உள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது மருத்துவ மனையில் ஒரு டாக்டர் மட்டும் பணியில் உள்ளார். 

    இந்த நிலையில் நேற்று காலை ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத் துவமனைக்கு வந்தனர். ஆனால் அங்கு டாக்டர் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் மருத்துவமனைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடனடியாக போதிய டாக்டர்களை நியமித்து 24 மணிநேரம் மருத்துவமனை இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். நோயாளிகளின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    எலும்பு வளர்ச்சி குறையுள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா கொளுந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 31), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (29), சுமார் 3½ அடி உயரம் கொண்டவர்.

    இவர், மரபணு கோளாறால் 40 ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும் ‘அக்னொட்ரோபில்சியா’ எனும் எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக பிறக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்.

    மாரியப்பனுக்கும், உமாமகேஸ்வரிக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் உமாமகேஸ்வரி கர்ப்பமானார். பிரசவ வலி காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு மகப்பேறு துறைத்தலைவர் ராஜலட்சுமி தலைமையில் சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 4-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் உமாமகேஸ்வரிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 2 கிலோ 200 கிராம் எடை இருந்தது.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மருத்துவமனையில் நடந்தது. முன்னதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமி உமாமகேஸ்வரிக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அவர் அந்த ஆண் குழந்தைக்கு அருண்சந்தர் என பெயரிட்டார். மேலும் அவர் தனது சொந்த செலவில் 7 கிராம் கொண்ட தங்க சங்கிலி அணிவித்தார். டாக்டர்களின் சாதனையை கொண்டாடும் விதமாக ‘கேக்’ வெட்டப்பட்டது. பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையும், பிறப்பு சான்றிதழும் கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் எலும்பு வளர்ச்சி குறையுள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த குழந்தை நலமாக உள்ளது. டாக்டர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்’ என்றார்.

    பிரசவம் பார்த்த டாக்டர் ராஜலட்சுமி கூறுகையில், ‘உமாமகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தோம். வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. அதற்காக மயக்கவியல், எலும்பு பிரிவு டாக்டர்கள் மற்றும் சிறப்பு குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம்.

    அறுவை சிகிச்சையின் போது உமாமகேஸ்வரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அது சீரானது. எங்களது முயற்சியில் வெற்றி பெற்றோம். சில ஆண்டுகள் கழித்து தான் அந்த குழந்தைக்கு மரபணு கோளாறு உள்ளதா? என்று கண்டறிய முடியும். அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும், சிறந்த டாக்டர்களும் இருந்ததால் இந்த முயற்சியில் நாங்கள் இறங்கினோம்’ என்றார்.
    ×