search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லி"

    • வாகனங்களில் செல்லவோ முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் சாலைப்பணி முடிக்கப்ப டாமலேயே அப்படியே கிடப்பில் உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருந்தவபுரம் ஊராட்சியில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமத்துவபுரம் பகுதியில் சாலைப்புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த கப்பி சாலையை பெயர்த்து கருங்கல் ஜல்லிகள் பரப்பி உள்ளனர்.

    ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் சாலைப்பணி முடிக்கப்ப டாமலேயே அப்படியே கிடப்பில் போடப்பட்டு ள்ளதால் கிராம மக்கள் சாலையில் நடந்து செல்லவோ வாகனங்களில் செல்லவோ முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைப்பணி யை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

    ஓமலூர்:

    ஓமலூர் வட்டாரத்தில் கல்குவாரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. அதிலும், காடையாம்பட்டி தாலுக்காவில் மிக அதிகமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 74 கிரஷர்கள், 50 கல்குவாரிகள் உள்ளன.

    போராட்டம்

    இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் தற்போது எம்.சாண்ட், ஜல்லி ஆகியவை ஒரு யூனிட் ரூ.200 வீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.3 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500-ஆகவும், பி.சாண்ட் ரூ. 4 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதே போல் ஒரு யூனிட் 40 எம்.எம், 30 எம்.எம் ஜல்லி கற்கள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு யூனிட் சிப்ஸ் ஆயிரத்து 800 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினர். ஆனால், தற்போது ஒரு யுனிட் சிப்ஸ் 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 2 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற கல் பவுடர், தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    இது குறித்து சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் ராஜா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தவில்லை. தற்போது கிரஷர் உதிரிபாகங்கள் விலை, டீசல் விலை, மின் கட்டண உயர்வு ஆகியவை பல மடங்கு உயர்ந்து விட்டது. அதே போல தொழிலாளர்கள் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட விலையை ஒப்பிட்டால், சேலத்தில் விலை குறைவுதான். அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாகவே விற்பனை செய்யபடுவதால், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை
    • கட்டையன்விளை பஞ்சபாண்டவர் கோவில் பகுதியில் சாலை பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட கட்டையன்விளை பஞ்சபாண்டவர் கோவில் பகுதியில் சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது 7 குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 5 குவாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் எடுத்துச் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‌.

    சித்திரங்கோடு பகுதியில் எடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. களியக்கா விளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில் எடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கனிமவளங்கள் எடுப்பதில் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அரசு பணிகளுக்கு கனிம வளங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளேம்.

    அரசு பணிகளுக்கு தேவையான ஜல்லி, எம்சாண்ட் வழங்காத குவாரிகள் மீது கடும் நடவடிக்தகை எடுக்கப்படும். தற்போது ெரயில்வே திட்டப் பணிகளுக்கும் நான்கு வழி சாலை பணிகளுக்கும் கனிவளங்கள் அதிகம் தேவைப்படுகிறது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 39 குவாரிகள் இருந்தது.இதில் பல குவாரிகள் மூடப்பட்டுள்ளது. 6 குவாரி கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அனுமதியில்லா மல் குவாரிகள் எதுவும் செயல்படவில்லை.

    குமரி மாவட்டத்தில் சமீபத்தில் மட்டும் அதிக பாரம் ஏற்றி சென்ற வாகனங்களுக்கு இதுவரை ரூ.2.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதம் ஏற்படா மல் சிறிய வாகனங்களில் மட்டுமே கனிம வளங்களை கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளோம். கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருந்தது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த சாலைகள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் கடுமையான போக்குவரத்து தெருக்கடி ஏற்பட்டு வந்தது.அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரவுண்டானா பணி முடிவடையும் பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடி தீர்வு ஏற்படும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த்மோகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×