search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பான் தூதர்"

    • மும்பையில் உள்ள பிலிம்சிட்டியை முழுமையாக ரசித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி சமீபத்தில் தனது மனைவி எய்கோ சுசுகியுடன் மும்பையில் உள்ள பிலிம்சிட்டிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றுடன் மும்பையில் உள்ள பிலிம்சிட்டியை முழுமையாக ரசித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதில், ஒரு வீடியோவில் ஹிரோஷி தனது மனைவியுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சிகளும், கோல்மால் படத்தில் பயன்படுத்தப்பட்ட அதே பைக்கில் ஜோடியாக கேமராவுக்கு போஸ் கொடுக்கும் காட்சிகளும் இருந்தது. மேலும் அமீர்கானின் பிரபலமான 3இடியட்ஸ் படத்தில் பயன்படுத்தப்படும் பம் நாற்காலிகளில் ஹிரோஷி, அவரது மனைவி, மற்றொரு நபர் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளது. அந்த படத்துடன் அவரது பதிவில் அமீர்கானை போல உணர்ந்தேன் என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    • பதிவை பார்த்த பயனர்கள் பலரும் ஹிரோஷியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • யோகா உடலுக்கும், மனதுக்கும் அற்புதமானது என கூறியுள்ளார்.

    இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசூகி வாரணாசி, ரிஷிகேஷிக்கு சுற்றுப்பயணம் செய்தார். ரிஷிகேஷியில் பல இடங்களுக்கு சென்று அழகை ரசித்த அவர், அங்கு கங்கை நதியில் குளிர்ந்த நீரில் கால்களை நனைத்தபடியும், கைகளை விரித்து நின்று யோகா பயின்ற புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பயிற்சியாளரிடம் இருந்து யோகா கற்றுக்கொள்ளும் காட்சிகள் உள்ளது. பயிற்சியாளரின் அறிவுறுத்தல்படி ஹிரோஷி கைகளை நீட்டுவது, வார்ம் அப் செய்வது மற்றும் யோகா பயிற்சி செய்வது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளது. மேலும் அவர் தனது பதிவில், நான் தற்போது ரிஷிகேஷியில் இருக்கிறேன்.

    இங்கு யோகா கற்கிறேன் என பதிவிட்டுள்ளார். பதிவை பார்த்த பயனர்கள் பலரும் ஹிரோஷியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், பாரதம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான உங்கள் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் சார். யோகா உடலுக்கும், மனதுக்கும் அற்புதமானது என கூறியுள்ளார்.

    ×