என் மலர்
நீங்கள் தேடியது "Hiroshi Suzuki"
- மும்பையில் பல்வேறு இடங்களுக்கு சென்ற ஹிரோஷி சுசுகி லோக்கல் ரெயிலில் பயணம் செய்தார்.
- ஹிரோஷி சுசுகியின் டுவிட் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கான ஜப்பானிய தூதராக ஹிரோஷி சுசுகி உள்ளார். இவர் நேற்று மும்பை சென்றிருந்த நிலையில், அங்கு மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
பின்னர் மும்பையில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் லோக்கல் ரெயிலில் பயணம் செய்தார். மேலும் நடைபாதை கடைகளுக்கு ஷாப்பிங் சென்ற அவர், ஒரு ஜவுளி கடையில் 100 ரூபாய்க்கு சட்டை என்ற அறிவிப்பை பார்த்து கடைக்கு சென்றுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதில், நான் மும்பையில் இருக்கிறேன் என ஒரு பதிவும், மற்றொரு பதிவில் 100 ரூபாய்க்கு சட்டை விற்கும் கடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, என்ன பேரம் பேசலாம்? நான் வாங்கட்டுமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது. அவரது டுவிட் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- மும்பையில் உள்ள பிலிம்சிட்டியை முழுமையாக ரசித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி சமீபத்தில் தனது மனைவி எய்கோ சுசுகியுடன் மும்பையில் உள்ள பிலிம்சிட்டிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றுடன் மும்பையில் உள்ள பிலிம்சிட்டியை முழுமையாக ரசித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதில், ஒரு வீடியோவில் ஹிரோஷி தனது மனைவியுடன் ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சிகளும், கோல்மால் படத்தில் பயன்படுத்தப்பட்ட அதே பைக்கில் ஜோடியாக கேமராவுக்கு போஸ் கொடுக்கும் காட்சிகளும் இருந்தது. மேலும் அமீர்கானின் பிரபலமான 3இடியட்ஸ் படத்தில் பயன்படுத்தப்படும் பம் நாற்காலிகளில் ஹிரோஷி, அவரது மனைவி, மற்றொரு நபர் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளது. அந்த படத்துடன் அவரது பதிவில் அமீர்கானை போல உணர்ந்தேன் என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
Fully enjoyed Film City in Mumbai??️?‼️ pic.twitter.com/VdlVVOHeW9
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) March 21, 2024






