search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமநாத சுவாமி கோவில்"

    • நாளை சோமாஸ்கந்தர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • 10-ம் திருநாளான (செவ்வாய் கிழமை) திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    2-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) சோமாஸ்கந்தர் புறப்பாடும், 4-ம் நாளான (புதன்கிழமை) சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.

    பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 7-ம் திருநாளான (சனிக்கிழமை) அதிகாலை நடராஜர் அபிஷேகமும், அதிகாலை 4.15 மணிக்கு நடராஜர் உருகு சட்டசேவையும், இரவு 9 மணிக்கு நடராஜர் முதலாம் கால ருத்ர அம்ச சிவப்பு சாத்தியும், 8-ம் திருநாளான (ஞாயிற்றுகிழமை) அதிகாலை 6.30 மணிக்கு நடராஜர் 2-ம் கால பிரம்ம அம்ச வெள்ளை சாத்தியும், பிற்பகல் 2 மணிக்கு 3-ம் கால விஷ்ணு அம்ச பச்சை சாத்தியும் நடைபெறுகிறது.

    10-ம் திருநாளான (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர் ஹரிஹரசுப்ரமணிய பட்டர், மணியம் அய்யப்பன், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், மண்டகப்படிதாரர் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார், ஜோதிடர் ராஜாமணி, அ.பி.வை.அண்ணாமலை, சுப்ரமணியன் மற்றும் தேவஸ்தான நிர்வா கத்தினர், மண்டகப்ப டிதாரர்கள் மற்றும் உபய தாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.
    • சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து லட்சார்ச்சனை தொடங்கியது. 2-வது நாளிலும் லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தன. நிறைவு நாளான இன்று காலை விநாயகர் பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம். பூரண ஆஹூதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

    பின்னர் சுவாமி மற்றும் அம்பாள் கோபுர விமானங்களில் கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது பக்தர்கள் 'அரகர மகாதேவா' என்று முழக்கம் எழுப்பினர்.இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.இதன் பின்னர் லட்சார்ச்சனை நிறைவுக்கு பின் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தன.

    இதில் பக்த ஜனசபை சார்பில் சண்முக வெங்கடேசன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, கற்பக விநாயகம், சங்கரலிங்கம், இளைய பெருமாள், தொழிலதிபர் பெருமாள், பேராசிரியர் அசோக்குமார் மற்றும் திருமுறை பன்னிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.

    ஆலய பூஜகர் அய்யப்ப சிவாச்சாரியார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா மற்றும் பக்தஜன சபையினர் செய்துள்ளனர்.

    ×