search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் டவர்"

    • பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலூர் ஊராட்சி பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று டவர் அமைக்க அனுமதி பெற்றதாக கூப்படுகிறது. ஆனால் அனுமதி பெற்ற இடத்தில் அமைக்காமல் திப்பிரமலை ஊராட்சி அலுவலகம் அருகில் குடியிருப்புகள் மத்தியில் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனை கண்டித்து திப்பிரமலை ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி உறுப்பினர் தவசுமணி தலைமையில் திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஜோபி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், துணைத்தலைவர் லெனின்குமார், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சதீஷ்குமார், ஜென்சன் முத்துராஜ் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

    • இந்த டவர் அமைந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள்.
    • மயில்கள், குருவிகள் என பலவிதமான பறவைகள் வாழ்ந்து வருகினறன, அவை அனைத்தும் பாதிக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் புதுநகரில் 200 வீடுகள் உள்ளன. இங்கு மொபைல் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த டவர் அமைந்தால் 500 மீட்டர் சுற்றளவுக்கு கதிர்வீச்சு அதிகளவில் இருக்கும் .

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள். பலவிதமான நோய்கள் தாக்கும் வாய்ப்பும் உள்ளது .மேலும் இந்த பகுதியில் மயில்கள், குருவிகள் என பலவிதமான பறவைகள் வாழ்ந்து வருகினறன. அவை அனைத்தும் பாதிக்கப்படும்.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்தப் பகுதியில் மொபைல் டவர் அமைக்காமல்இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுநகர் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    • தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தனிநபர் வீட்டு மாடியில் உள்ள தனியார் செல்போன் டவரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட வனதுர்காநகர், சரஸ்வதி நகர், பொதிகை நகர், லெட்சுமி நகர், ஏ.கே.எல். காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனிநபர் வீட்டு மாடியில் உள்ள தனியார் செல்போன் டவரை அகற்ற வேண்டும்.

    அரசு உத்தரவை மீறிய அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு கருப்புசாமி, மாதர் சங்கம் ஒன்றிய செயலாளர் வனரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×