search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்சி"

    இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியாக செல்சி தனது தலைமை பயிற்சியாளரான ஆன்டோனியோ கான்டேவை அதிரடியாக நீக்கியுள்ளது. #Chelsea
    இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் முன்னணி அணியாக செல்சி விளங்கி வருகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ஆன்டோனியோ கான்டோ.

    இவரது தமைமையில் செல்சி 2016-17 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது. அப்போது செல்சி அணி 38 போட்டியில் 30 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. 13 வெற்றிகளை தொடர்ச்சியாக ருசித்திருந்தது.



    கான்டேவிற்கும் அந்த அணியின் உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கான்டேவின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே செல்சி அவரை பதவியில் இருந்து தூக்கியுள்ளது.

    கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்காக டோட்டன்ஹாம், செல்சி உள்பட ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #Ronaldo #RealMadrid #PSG
    போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 33 வயதாகும் இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறது. ரியல் மாட்ரிட் அணி கடந்த மூன்று வருடமாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல இவர்தான் முக்கிய காரணம்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இடையே விளையாட்டில் அதிக அளவில் போட்டி நிலவி வருகிறது. இந்த சம்பளத்திலும் நீடிக்கிறது. தற்போது ரொனால்டோவை விட மெஸ்சி அதிக சம்பளம் வாங்குகிறார். அவரை விட கூடுதல் சம்பளம் வாங்க ரொனால்டோ விரும்புகிறார். ஆனால் 33 வயதாகிவிட்டால் ரியல் மாட்ரிட் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க யோசிக்கிறது.



    இந்நிலையில் அவர் தனது பழைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்லலாம் என்ற கிசுகிசு வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே டோட்டன்ஹாம், செல்சி அணிகளும் அவரை இழுக்க முயற்சி செய்கிறது. இதற்கிடையே பணக்கார கிளப்பான பிஎஸ்ஜி மற்றும் பேயர்ன் முனிச் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மட்டுமே செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது ரொனால்டோவின் வாரச் சம்பளம் 3 லட்சத்து 65 ஆயிரம் பவுண்டு எனக்கூறப்படுகிறது. ஆனால் மெஸ்சியின் சம்பளம் 5 லட்சம் பவுண்டு எனக்கூறப்படுகிறது.
    எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. #ChelseaFC #ManchesterUnited #FACup

    லண்டன்:

    2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டியாகும். இந்த தகுதிச்சுற்று போட்டிகளின் ஒரு பகுதியான எப்.ஏ. கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செல்சி அணி, மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டி தொடங்கிய 22-வது நிமிடத்தில் செல்சி அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை செல்சி அணி சரியாக பயன்படுத்தி கொண்டது.



    பெனால்டி வாய்ப்பில் செல்சி அணி வீரர் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் இறுதி நிமிட ஆட்டம் வரை இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சி அணி கோப்பையை கைப்பற்றியது. செல்சி அணி எப்.ஏ.கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும். #ChelseaFC #ManchesterUnited #FACup
    ×