search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செலவு அதிகரிப்பு"

    • பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
    • மரபணு மாற்றப்பட்ட விதையால் விதை அழிந்து விட்டது.

    உடுமலை :

    பருத்தி,நூல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்ததால் ஒட்டு மொத்த ஜவுளி துறையும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதை சமாளிக்க அரசு வெளிநாட்டில் இருந்து பருத்தி இறக்குமதி செய்கிறது. தற்போது அங்கும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.உள்நாட்டில் பருத்தி சாகுபடி அதிகரிக்காவிட்டால் ஒட்டுமொத்த ஜவுளி துறையும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

    உலக அளவில் நம் ஏற்றுமதி வாய்ப்பு பறிபோய் விடும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அரசு பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொழிலாளர்கள் முன்பு 10 மணி நேரம் வேலை பார்த்தனர். தற்போது 6மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கின்றனர். கடின வேலை என்பதால் ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. மரபணு மாற்றப்பட்ட விதையால் விதை அழிந்து விட்டது. தற்போது ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு வெளியில் தான் வாங்க வேண்டும். செலவு அதிகரிப்பால் பருத்தி சாகுபடியை தவிர்த்து வருகிறோம். எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளை அரசு பாதிக்கும் மேல் இறக்குமதி செய்கிறது.

    இதனுடன் பருத்தியும் இணைந்துள்ளது. விலை உயராமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. தொடர் நஷ்டம் வருவதால் நாங்களும் உற்பத்தியை குறைக்கிறோம்.இதனால் ஒட்டுமொத்த தொழில்துறையும் முடங்கியுள்ளது. அரசு தன் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தாலே பருத்தி சாகுபடி உயர்ந்து விடும் என்றனர்.

    ×