search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்பட்டனர்"

    • ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை

    கோவையில் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் ரவுடி சத்திய பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்பவர் சென்னை எழும்பூர் கோர்டில் சரணடந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது போலீசாரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் போலீசார் சஞ்சய் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்தனர்.

    இந்த நிலையில் ரவுடி சஞ்சய் ராஜாவுக்கு தியேட்டர் விவகாரத்தில் ஆதரவாக செயல்பட்டு கட்டப்பஞ்சாயத் தில் ஈடுபட்டவர்கள் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். இதில் 30 பேர் சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்ட தெலுங்கு பாளையத்தை சேர்ந்த ஜார்ஜ் (வயது 42), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஜாபர் (43), தெலுங்குபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (59), கணுவாயை சேர்ந்த உதயகுமார் (58), போத்தனூரை சேர்ந்த கேசவன் (42), வடவள்ளியை சேர்ந்த சுப்ரமணியன் (60), இடையர்பாளையத்தை சேர்ந்த வாசன் (58), செல்வபுரத்தை சேர்ந்த சூரிய பிரசாத் (26), குனியமுத்தூரை சேர்ந்த சக்திவேல் (48), சபரிராஜ் (31), செல்வபுரத்தை சேர்ந்த சரவணன் (44), காந்திபார்கை சேர்ந்த பிரகாஷ் (43), சாய்பாபா காலனியை சேர்ந்த பிரதீப் குமார் (52) உடபட 13 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×