search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கனமழை"

    சென்னையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து தற்போதுவரை 77 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென்கிழக்கே சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா வடதமிழகம் கடற்கரை பகுதியில் சென்னைக்கு அருகில் இன்று மாலை கடந்து செல்லும்.

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடம். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.  வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பைவிட 54 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது. சென்னையில் கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரை 77 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.

    மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்றார். கரையை கடக்கும்போது 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றார்.
    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று நான்கு நாட்களாக ஆய்வு செய்த நிலையில், இன்று மாலை கடலூர் செல்வதாக தகவல் தெரிவிக்கின்றன.
    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக சென்னையில் மழை பாதிப்புகளை தினமும் நேரில் சென்று பார்வை யிட்டு பணிகளை முடுக்கி விட்டார். இன்று மாலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து மக்கள் தவிக்கிறார்கள். மழை நீர் புகுந்ததால் சில கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன.

    கடலூர் செல்லும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அங்கு தங்கி இருக்கவும், வெள்ள பாதிப்புகளை டெல்டா மாவட்டங்களில் நேரில் சென்று பார்வை யிடவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்க இருக்கும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை அருகே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருக்கிறது. இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
    சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று மாலையில் இருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று மாலை சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரித்தது. தற்போது சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

    இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. கிண்டி ஆளுநர் மாளிகை அருகே இன்று காலை மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதற்கிடையே பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து மாற்றம், தடை ஏற்பட்டுள்ளது.
    சென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதலில் காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை மையத்தால் கணிக்கப்பட்டது.

    அதன்பின் கரையை கடக்கும் திசை மாறியதாக தெரிவித்த வானிலை மையம், கரையை கடக்கும் திசையை துல்லியமாக கணிக்க முடியவில்லை என தெரிவித்தது.

    இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி,  காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.

    தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, புதுச்சேரிக்கு மேற்கே 170 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடசென்னை அருகே கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

    இதனால் சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வரை தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
    சென்னையில் காற்றுடன் கனத்த மழை பெய்து வருவதால், மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவில் இருந்து காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மழையின் அளவு அதிகரித்தது.

    இதனால் சாலைகளில் ஓடும் வெள்ளத்தின் அளவு கூடியது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்:

    1. வியாசர்பாடி

    2. கணேஷபுரம்

    3. அஜாக்ஸ்

    4. கொங்கு ரெட்டி

    5. மேட்லி

    6. துரைசாமி

    7. பழவந்தாங்கல்

    8. தாம்பரம்

    9. அரங்கநாதன்

    10. வில்லிவாக்கம்

    11. காக்கான்
    சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய மிக மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை காலை 6 மணிக்கு மாமல்லபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    தற்போது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாளை இடியுடன் கூடிய மிக மிக கனமழை பெய்யும். சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் ரெயில் புறப்படும், வந்தடையும் நேர அட்டவணை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.
    சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தெற்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், சென்னைக்கு அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்கள், வந்தடையும் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து தெரிந்துகொள்ள தெற்கு ரெயில்வே சார்பில் உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    044-25330952, 044-25330953, 8300052104 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயணிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம்.
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரையொட்டி கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது திசை திரும்பியுள்ளது.
    தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஐந்து மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்  என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், நேற்றில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூரை ஒட்டி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க திருச்சி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர் (சிதம்பரம்), மதுரை,  திருவள்ளூர், அரியலூர் (கூடுதலாக பெரம்பலூர்), விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துவரும் திசை திரும்பியுள்ளது. காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூரையொட்டி கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது திசை திரும்பி, மகாபலிபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும்.  நாளை காலை 6.00 மணிக்கு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    காற்றழுத்தத்தாழ்வு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை கடலூர் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் ஏறக்குறைய எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வு, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைக்க திருச்சி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர் (சிதம்பரம்), மதுரை,  திருவள்ளூர், அரியலூர் (கூடுதலாக பெரம்பலூர்), விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறை கூறுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
    சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த அதி கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அதில் இருந்து தற்போது வரை சென்னை நகரம் சூரியனை காணவில்லை. மேக மூட்டமாக வானம் காணப்பட்டு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.

    இதனால் பெரும்பாலான இடத்தில் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் வெள்ளம் வடியாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சியை கண்டித்துள்ளது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கோப்புப்படம்

    இந்த நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது. மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை. தமிழக அரசின் இயலாமையை மறைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார்’’ என்றார்.

    நாளை சென்னையில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    நாளையும், நாளை மறுநாளும் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    வடகிழக்கு பருவமழை காரணமாகவும், குறைந்த காற்றழுத்தத்தாழ்வு உருவாகியுள்ளதாலும் நாளையும், நாளை மறுநாளும் (நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11) கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×