search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறையாடிய காட்டு யானைகள்"

    • கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
    • காட்டு யானைகள் நுழையாதபடி நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. விவசாய நிலங்களையும் விவசாயிகளின் உடைமைகளையும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. பணப் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விவசாய நிலங்களில் புகாமல் விரட்ட வனத்துறையினர் இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழலில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.இன்று விவசாய நிலங்களை சேதப்படுத்துமோ,தங்கள் வீடுகளை சேதப்படுத்துமோ,அல்லது தங்கள் உயிருக்கு உலை வைக்குமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நாட்களையும்அச்சத்துடன் கடந்து வருகின்றனர் பேத்துப்பாறை கிராம மக்கள்.

    இதே போல் நேற்று புதுக்கோட்டை மன்னர் வாரிசுகளின் பழைய பங்களாவை சேதப்படுத்தியது.முழுமையாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். பொது மக்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் காட்டு யானைகள் நுழையாதபடி நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டம் ஆடலூரை சுற்றியுள்ள வனப்பகுதியில் சிலநாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.
    • காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக்காடு, நேர்மலை கடைசி கூட்டுக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    அவை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் பெரும்பாறை அருகே சோலைக்காட்டை சேர்ந்த விவசாயியான பூதப்பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்குள் யானைகள் புகுந்தன. அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, பாக்கு மரம் போன்ற வற்றை நாசம் செய்தன. மேலும் அங்கிருந்த தோட்டத்து வீட்டை சூறையாடி சேதப்படுத்தின.

    இதனையடுத்து அதிகாலையில் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இதற்கிடையே பூதபாண்டி தனது தோட்டத்திற்கு வந்தபோது வீடு மற்றும் பயிர்கள் நாசமாகி இருந்ததை பார்த்து வேதனை அடைந்தார்.

    காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆடலூர், சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    ×