search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரசம்ஹாரம் விழா"

    • மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சஷ்டியையொட்டி சூரசம்காரம் விழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி எனும் முருகப்பெருமானுக்கு தினந்தோறும் பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் பெண்கள் விரதமிருந்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான், வீரபாகு, சூரன் ஆகியோர் சப்பரத்தில் சத்தி சாலை மாரியம்மன் கோவில் வழியாக வந்து பவானிசாகர் சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று முருகப்பெருமான் வீரபாகு உடன் சேர்ந்து முதலில் கஜமுகனை வதம் செய்தார்.

    இதையடுத்து 2-வதாக வானு கோவணை வதம் செய்தார். 3-வதாக சிங்க மகனை வதம் செய்து 4-வதாக கோவில் வளாகத்தில் சராகா சூரனை வதம் செய்துவிட்டு வான வேடி க்கைகளுடன் முருகப்பெரு மான் சிவபெருமானுக்கு சிவ பூஜைகள் செய்து முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா விழா கடந்த 14-ந் தேதி காலை தொடங்கியது.

    அன்று காலை 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது அதன் பிறகு காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.

    11 மணிக்கு மகா பூர்ணாகுதியும் 11.30 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடை பெற்றது. தொடந்து பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு வள்ளி தெய்வானை க்கு அபிஷேம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை 5 நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்பு நேற்று மதியம் 2 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச் சாரியார் முருகப்பெரு மானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேல்லினை ஒப்படைத்தார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெருமான் சமேதராக மலை அடிவார த்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடி க்கை மற்றும் சிறப்பு மேள தாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா தொடங்கியது.

    சென்னிமலை டவுன், நான்கு ராஜா வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சி யை ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டு களித்தனர்.

    இதில் மேற்கு ராஜா வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜா வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜா வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்சியும் நடந்தது.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். அதை தொடந்து இன்று காலை 10.30 மணிக்கு முருகப்பெரு மான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடைபெற்றது.

    கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    • சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு கந்தசஷ்டி விரதம் கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • சப்பரத்தில் உற்சவர் ஆறுமுகம் கொண்ட சண்முகர் கோவில்மாட வீதியை சுற்றி வந்தார். மாலையில் உற்சவர் சண்முகருக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.

    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு கந்தசஷ்டி விரதம் கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலை மூலவர் சுப்ரமணியருக்கு வள்ளி, தெய்வானையுடன் அபிஷேகம் நடந்தது. பின்னர் சப்பரத்தில் உற்சவர் ஆறுமுகம் கொண்ட சண்முகர் கோவில்மாட வீதியை சுற்றி வந்தார். மாலையில் உற்சவர் சண்முகருக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.

    வேல் வாங்கும் நிகழ்வு

    இன்று மாலை கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஸ்வர்ணாம்பிகை அம்மனிடம் இருந்து உற்சவர் சண்முகர் வேல் வாங்கும் நிகழ்வு நடக்கிறது. மதியம் 3.30 மணிக்கு உற்சவர் மயில் வாகனத்தில் புறப்பட்டு ராஜகணபதி, லட்சுமி பெருமாள், முதல் அக்ரஹாரம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் பகுதிகளில் சூரனை வதம் செய்யும் விழா நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு யானை வாகனத்தில் உற்சவர் புறப்பாடு நடக்கிறது. நாளை மதியம் 3 மணி முதல் 4.30 மணிக்குள் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

    அதேபோல் அம்மா பேட்டை குமர குரு சுப்ரமணியர், சீலநாயக் கன்பட்டி ஊத்துமலை முருகன், ஏற்காடு அடிவார ஆறுபடை முருகன் உள்பட மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடக்கிறது.

    வடசென்னி மலை பாலசுப்ரமணியர்

    ஆத்துார் அருகே வடசென்னி மலை பாலசுப்ரமணியர் கோவிலில் 49-ம் ஆண்டு சூரசம்ஹார விழா கடந்த 12-ந் தேதி கந்த சஷ்டி பூஜையுடன் தொடங்கியது. நேற்று மாலை 6.30 மணிக்கு மூலவருக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் விபூதி, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்வதற்கு பார்வதி தேவியிடம் பாலசுப்ரமணியர் வேல் வாங்கும் நிகழ்வு நடந்தது. வேலை வாங்கிச்சென்ற பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, விநாயகருடன் மலர் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தேரில் இரவு 8.30 மணிக்கு கோவில் குளத்து நீரில் 3 முறை இழுத்து வரப்பட்டார். அப்போது திருமண மாகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டுவோர், பல்வேறு பிரச்னைகள் நீங்கவும் பெண்கள், விளக்கு, வாழை கற்பூரம் ஏற்றி குளத்தில் விட்டு வழிபட்டனர். இன்று மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 

    ×