search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரப் பணிகள்"

    • நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் சுகாதாரத் துறை சார்பில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது பற்றியும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிரசவங்கள், மக்களை தேடி மருத்துவச் சேவைகள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சேவைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசைகளோடு ஒப்பிட்டு கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    பொது மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் இதர துறைகளின் ஒத்துழை ப்பு குறித்தும் விவாதித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில்குமார், அரசு விழுப்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) கீதாஞ்சலி மருத்துவப் பணிகள் மற்றும் குடும்பநலத் துறை இணை இயக்குநர் லட்சுமணன், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவல ர்கள், சுகாதாரத்து றை அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை அலுவலர்கள், மற்றும் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்
    • புதிய எந்தி ரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்தவும், சாக்கடை அள்ளவும் பொக்லைன் மற்றும் கிட்டாச்சு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.

    இந்த நிலையில் மாநகராட்சிக்கு புதிய பொக்லைன், கிட்டாச்சு மற்றும் மினி கிட்டாச்சு ஆகியவை வாங்கப்பட்டு உள்ளது. 15-வது மத்திய நிதி குழுமத்தின் கீழ் ரூ.37.10 லட்சத்தில் பொக்லைன் எந்திரம், ரூ.46.94 லட்சத்தில் கிட்டாச்சு எந்திரம் மற்றும் ரூ.24.09 லட்சத்தில் மினி கிட்டாச்சு எந்திரம் ஆகி யவை வாங்கப்பட்டு உள்ளன.

    இந்த எந்திரங்கள் தொடக்க நிகழ்ச்சி மாநக ராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் பங்கேற்று புதிய எந்தி ரங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், "நாகர்கோவில் மாந கராட்சியை தூய்மை யாக வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மேலும் தீவிரப்படுத்த தூய்மைப் பணிக்காக பொக்லைன் மற்றும் கிட்டாச்சு எந்தி ரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

    எனவே புதிய எந்தி ரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் சர்வீஸ் செய்ய வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் பால சுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், கவுன்சிலர்கள் முத்துராமன், ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×