search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி படுகாயம்"

    • ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுமி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள மேக்கிலார்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி(29). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி-மதுரை மெயின்ரோடு கொண்டமநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த மேக்கிலார்பட்டியை சேர்ந்த குபேந்திரன் மகள் மித்ராதேவி(12) என்பவர் படுகாயமடைந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரான விக்னேஷ் என்பரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை.
    • சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    வண்டலூர்:

    காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றி சுவர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும்போது அந்த பள்ளங்களில் தவறி விழும் நிலை அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விளையாடிக் கொண்டிருந்த போது விபரீதம்
    • நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஆம்பூர்:

    திரும்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத்சாஹெப், தொழிலாளி.

    இவரது மகள் ஹப்சா ( வயது 3). சிறுமி நேற்று சாந்தாமியான் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென 3 நாய்கள் உள்ளே நுழைந்தது.

    விளையாடிக் கொண்டிருந்த ஹப்சாவை நாய்கள் திடீரென துரத்தி கடித்துக் குதறியது. வலி தாங்காமல் சிறுமி கூச்சலிட்டு அழுதார்.

    ஹப்சா அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர்.

    படுகாயம் அடைந்த சிறுமி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆம்பூர் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.

    நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிலர் விழுந்து, எழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.

    எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யாஷிகா தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • காயம் அடைந்த சிறுமி யாஷிகாவுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரம்பூர்:

    தண்டையார் பேட்டை, நேதாஜி நகர், 4-வது தெருவில் உள்ள வீட்டில் முதல் மாடியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மகள் யாஷிகா. தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு சிறுமி யாஷிகா வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த மரத்தின் கிளையில் விழுந்து அதில் தொங்கியபடி விழுந்தார். இதல் பலத்த காயம் அடைந்த சிறுமி யாஷிகாவுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார்

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை வசிப்பவர் வேலுச்சாமி, இவரது மகள் சாதனா (வயது 5). இன்று காலை இவரை இவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது சீர்காழி - புறவழிச்சாலையை கடக்க முயற்சித்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் சாதனா மீது மோதிவிட்டார். மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிவிட்டார்.

    அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சாதனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி கிருத்திகா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
    • கிருத்திகாவின் கை சிதைந்து பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள அவுரி மேடு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மகள் கிருத்திகா (வயது 11). இவர் மதுராந்தகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவி கிருத்திகா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தெரு ஓரத்தில் நடப்பட்டு இருந்த தெரு விளக்கு மின்கம்பம் திடீரென முறிந்து சிறுமி மீது விழுந்தது.

    இதில் கிருத்திகா மின் கம்பத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிருத்திகாவின் கை சிதைந்து பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மிகவும் பழுதடைந்து இருந்த அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தபோது மின்சாரம் பாயாததால் மாணவி அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழுதடைந்து நிற்கும் மின்கம்பங்களை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×