என் மலர்
நீங்கள் தேடியது "The girl was seriously injured"
- விளையாடிக் கொண்டிருந்த போது விபரீதம்
- நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆம்பூர்:
திரும்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத்சாஹெப், தொழிலாளி.
இவரது மகள் ஹப்சா ( வயது 3). சிறுமி நேற்று சாந்தாமியான் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென 3 நாய்கள் உள்ளே நுழைந்தது.
விளையாடிக் கொண்டிருந்த ஹப்சாவை நாய்கள் திடீரென துரத்தி கடித்துக் குதறியது. வலி தாங்காமல் சிறுமி கூச்சலிட்டு அழுதார்.
ஹப்சா அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், நாய்களை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர்.
படுகாயம் அடைந்த சிறுமி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆம்பூர் பகுதியில் தெரு நாய்கள் அதிகம் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர்.
நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிலர் விழுந்து, எழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.
எனவே தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க ஆம்பூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






