ஆண்டிபட்டியில் ஆட்டோ மீது ஜீப் மோதி சிறுமி படுகாயம்

ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுமி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகில் உள்ள மேக்கிலார்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி(29). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி-மதுரை மெயின்ரோடு கொண்டமநாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த ஜீப் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் வந்த மேக்கிலார்பட்டியை சேர்ந்த குபேந்திரன் மகள் மித்ராதேவி(12) என்பவர் படுகாயமடைந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஜீப் டிரைவரான விக்னேஷ் என்பரிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com