search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிமி இயக்கம்"

    • இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.
    • மற்ற நாடுகளில் உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    "சிமி" இயக்கத்துக்கு கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

    இந்த தடை உத்தரவை எதிர்த்து அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஹூமாம் அகமது சித்திக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.

    இதற்கிடையே இம்மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு, பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    சிமி இயக்கம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டிருந்தாலும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து, சந்தித்து சதி செய்வது, ஆயுதங்கள், வெடிமருந்துகளை பெறுகிறார்கள் என்பது தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மற்ற நாடுகளில் உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் நாட்டில் அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அவர்கள் கூறும் நோக்கங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கு முரணானவை. எனவே சிமி இயக்கத்தை செயல்பட அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×