search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கிம் மேகவெடிப்பு"

    • மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
    • 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேகவெடிப்பு ஏற்பட்டது. லோனாக் ஏரி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது.

    இந்த பேய் மழையால் அங்குள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த பெரு வெள்ளம் கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்து சுங்தாங் அணையை சென்றடைந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக அணையின் கீழ் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் 22 ராணுவ வீரர்கள் உள்பட ஏராளமானோர் அடித்து செல்லப்பட்டனர்.

    இந்த வெள்ளப்பெருக்கால் பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் நகரம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அந்த நகரின் 80 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் பாதைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்தன.

    சிக்கிமில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    22 ராணுவ வீரர்கள் உள்பட 98 பேரின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    மழை, வெள்ளத்தால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட மாநில முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருவதாக அவர் உறுதியளித்தார்.

    மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பாக முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங், மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறிய அதிகாரிகள், அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசி நிலைமையை எடுத்துரைத்ததாகவும், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தனர்.

    • 5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுமார் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மழை வெள்ளத்தில் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கேங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மிக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. மிக குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியது.

    5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் உடைத்துக்கொண்டு வெள்ளம் சீறிப் பாய்ந்தது. அந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது.

    இந்த 4 மாவட்டங்களிலும் ஏற்கனவே பலத்த மழை பெய்து இருந்ததால் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 100 வாகனங்களில் வந்திருந்த வீரர்கள் மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களும் தீஸ்தா நதி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    நேற்று முன்தினம் இரவு 4 மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகள் மற்றும் மக்களின் உடமைகளை வெள்ளம் அடித்து சென்றது. ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. அங்கிருந்து 23 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அவர்களது கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.

    வெள்ள சற்று வடிந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த மக்கள் மீட்கப்பட்டனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி விட்டனர். அவர்களது உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

    வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 23 ராணுவ வீரர்களில் ஒரு ராணுவ வீரர் இன்று அதிகாலை மீட்கப்பட்டார். மற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தீஸ்தா நதி வெள்ளம் பாய்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

    மேற்கு வங்க மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சில ஊர்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இன்று (வியாழக்கிழமை) மீட்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.

    வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டவர்களில் 102 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. சிக்கிமில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

    இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள் ளன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    சிக்கிம் மாநிலத்துக்கு இந்த சீசனில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். திடீர் மேகவெடிப்பு-மழை காரணமாக சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மழை வெள்ளத்தில் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன. சிக்கிம் மாநிலத்துக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    • சிக்கிம் முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங்கை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, கனமழை, வௌ்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
    • சிக்கிமின் மங்கான், காங்டாக், பாக்யோங், நம்சி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 8-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் லோனாக் ஏரி உள்ளது.

    இந்த ஏரிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மேக வெடிப்பால் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இதனால், அங்குள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் பாயும் டீஸ்டா நதியில் நள்ளிரவுக்கு மேல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள சுங்தாங் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால் அதிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால் அந்த அணையின் கீழ் நீரோட்டப் பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகளில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு வெள்ளம் உயர்ந்து காட்டாறாய் சீறிப்பாய்ந்தது.

    ஆறுகளையொட்டி வசிப்பவர்கள் உஷாராகாத நிலையில் இருந்ததால் பெரும்பாலானோர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். கோலிடார், சிங்டாம் பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 45 பேர் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களில் 18 பேர் காயமடைந்திருந்தனர். ஏராளமான வீடுகளும், கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பல கட்டிடங்கள் வெள்ளம், சேற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

    தலைநகரான காங்டாக், வெள்ளத்தால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டீஸ்டா நதியையொட்டிய டிக்சு, சிங்டாம், ராங்போ உள்ளிட்ட பல நகரங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10, பல இடங்களில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

    மேலும் பல இடங்களில் டீஸ்டா நதியின் குறுக்கே அமைந்துள்ள பாலங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த திடீர் கனமழையால் ராணுவத்தினர், அவர்களின் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்ட 22 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். மேலும் 41 ராணுவ வாகனங்கள் சேற்றில் சிக்கியுள்ளன. ராணுவ வீரர்கள் தவிர, ராணுவத்தின் சாலை கட்டுமானப் பணி தொழிலாளர்கள் இருவர் உள்ளிட்ட 26 பேர் மாயமாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ராணுவத்தினரும், மீட்புப் படையினரும் அதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திடீர் கனமழை, வெள்ளத்தை பேரிடராக அறிவித்துள்ள சிக்கிம் மாநில அரசு, மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. பல நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் நூற்றுக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சென்று சேருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் சிக்கிம் முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்டாம் நகரத்துக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய அவர், விழிப்புடன் கண்காணிப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'பாதிக்கப்பட்ட மக்களுடன் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த இயற்கைச் சவாலை எதிர்கொள்ள எங்கள் குழுக்கள் இரவுபகலாக செயல்பட்டு வருகின்றன' என்று கூறியுள்ளார்.

    சிக்கிமின் மங்கான், காங்டாக், பாக்யோங், நம்சி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 8-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிக்கிம் முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங்கை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு, கனமழை, வௌ்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'சிக்கிம் மாநிலத்தில் துரதிர்ஷ்டமான இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து முதல்-மந்திரி தமாங்கிடம் கேட்டறிந்தேன். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நலத்துக்காக நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    டார்ஜிலிங் எம்.பி. ராஜு பிஸ்தாவும் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு, வெள்ள நிலைமை குறித்து விளக்கினார்.

    மாயமான ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நலமுடன் மீட்கப்பட பிரார்த்திப்பதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    டீஸ்டா நதி, மேற்கு வங்காள மாநிலத்திலும், வங்காளதேசத்திலும் பாய்வதால் அங்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்துவரும் நிலையில், காலிம்பாங், டார்ஜிலிங், அலிப்பூர்துவார் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களில் பல இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    • வடக்கு சிக்கிம் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென்று மேக வெடிப்பு ஏற்பட்டது.
    • பலத்த மழையால் சுங் தாங் அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகமானதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானார்கள். அதன் விவரம் வருமாறு:-

    வடக்கு சிக்கிம் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய மழையால் அப்பகுதியில் வெள்ளம் ஓடியது. குறுகிய நேரத்தில் அதிகளவு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பலத்த மழையால் சுங் தாங் அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகமானதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    சுமார் 15 முதல் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியது. இதனால் தீஸ்தா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட தொடங்கியது. நேரம் செல்ல செல்ல ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதில் சிங்டாம் அருகே பர்டாங்க் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    ராணுவ முகாமில் இருந்த வீரர்களும் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். அதிகாலையில் ராணுவ வீரர்கள் தூங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று வெள்ளம் புகுந்ததால் சுதாரித்து கொள்வதற்குள் பலர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சிலர் ராணுவ வாகனங்களுடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர்.

    வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளதை ராணுவம் உறுதிப்படுத்தியது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர். வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளின்போது சிங்டாமில் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி தெரிவித்தார். மேலும் காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

    ×