search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சை பிரிவு"

    • தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.
    • ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகள் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி 65 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1967-ம்ஆண்டு 100 படுக்கை வசதியுடன் உருவானது. தற்போது மருத்துவக்கல்லூரியுடன் சுமார் 240 ஏக்கரில் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது 1500 படுக்கை வசதியுடன் உள்ளது. அனைத்து துறையை சேர்ந்த 30 மூத்த டாக்டர்கள் மற்றும் 90 உதவி மருத்துவர்கள், 140 செவிலியர்கள் ஆகியோர் தற்போது அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.

    அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரசவ வார்டு, எலும்பு முறிவு , இருதய அறுவை சிகிச்சை பிரிவு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிவு, காய்ச்சல், கொரோனா சிகிச்சை உள்பட அனைத்துக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளன.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவ கல்லூரி எனினும் இந்த ஆஸ்பத்திரியில் தீக்காய பிரிவு மற்றும் தலை காய அவசர சிகிச்சை பிரிவு இல்லை. இதனால் தீக்காயம் மற்றும் விபத்துக்களில் தலையில் பலத்த காயம் அடைந்து வருபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருக்கிறது.

    நோயாளிகளை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் நிலை தொடர்கிறது. இதனால் ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகள் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலேயே தீக்காயம் மற்றும் தலைக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டால் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயம், மற்றும் தலைக்காயம் சிகிச்சை பிரிவை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள வாகன நெரிசலில் உயர்சிகிச்சைக்கு சென்னை சென்று சேர்வதற்குள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் பிரசவ வார்டில் எல்லாவற்றிற்கும் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள். கழிப்பறைகளில் கதவுகள் இல்லை. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது என்றனர்.

    • ரூ.30.50 கோடியில் கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்படுகிறது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கூடுதல் ஒருங்கி ணைந்த அவசர கால தாய்-சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு கூடுதல் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் 50 படுக்கை கள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 2 தளங்களுடன் ஒருங்கிணைந்த அவசரகால தாய்-சேய் சிகிச்சை மையத்திற்கான கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் 2 கூடுதல் பிரிவு கட்டிடங்க ளுக்கான கட்டுமான பணிகள் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் அத்திய வசியமாக விளங்கி வரும் மருத்துவத்தை எளிதாக கிடைக்கப்பெறச் செய்து அவர்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்து வத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அந்த திட்டங்களின் மூலம் பயன்பெற்று உடல்நலதை சிறந்த முறையில் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள கூடுதல் பிரிவு கட்டிடங்களை தரமான முறையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை யூனியன் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆன்ந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் புவனேசு வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தலைக்காய சிகிச்சை பிரிவு இல்லாததால் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
    • மயக்க மருந்து டாக்டர்கள் குறைவாக உள்ளதால் தினமும் 4 அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள முடிகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அளிக்க கூடிய வகையில் தேவையான வசதிகளும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்தில் பாதிக்க ப்படுபவர்கள் தலைக்காயம் ஏற்பட்டால் அவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து மதுரைக்குதான் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். மருத்துவ கல்லூரி வந்தால் தலைக்காய சிகிச்சை உள்ளிட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளும் இங்கேயே பார்க்கலாம் என்று நம்பி இருந்த மக்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது.

    இதுதவிர, ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பல சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாக டாக்டர் கூறு கையில், கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து துரிதப்படுத்த உத்தர விட்டுள்ளார். மயக்க மருந்து டாக்டர்கள் குறைவாக உள்ளதால் தினமும் 4 அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அறுவை சிகிச்சை பாதிக்கப்படுகிறது.

    விரைவில் கூடுதலாக மயக்க மருந்து டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆக்சிஜன் மையம் எலும்பு அறுவை சிகிச்சை, அறுவை அரங்கு புதிய கட்டிடம் முடிவடைந்ததும் அதில் செயல்படும். இன்னும் 3 மாத காலத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு அதற்கென தனி அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பட தொடங்கும். அதற்கு தேவையான எந்திரங்கள் வந்துள்ளன. 3 மாதத்திற்குள் அனைத்து எந்திரங்களும் வந்துவிடும்.

    ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் கிலோலிட்டர் திரவ ஆக்சிஜன் மையத்திற்கென தனியாக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

    ×