search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஇஓ"

    • விப்ரோ நிறுவன சி.இ.ஓ.வாக இருந்த தியரி டெலாபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • புதிய சி.இ.ஓ. மற்றும் நிர்வாக இயக்குநராக ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூரு:

    விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) ஆக இருந்த தியரி டெலாபோர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இந்நிலையில், புதிய சிஇஓ ஆகவும், நிர்வாக இயக்குநராகவும் ஸ்ரீனிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 4 ஆண்டாக விப்ரோவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய தியரி, இந்த நிறுவனத்துக்கு வெளியே தனது கனவைத் தொடர இந்த பதவியிலிருந்து கீழறங்குகிறார் என விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த முக்கிய தருணத்தில் விப்ரோவை வழிநடத்த ஸ்ரீனிவாஸ் ஒரு சிறந்த தலைமையாக இருப்பார் என விப்ரோ தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

    புதிய சி.இ.ஓ. ஆக பதவியேற்பது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீனிவாஸ் பாலியா, புகழ்பெற்ற இந்த நிறுவனத்தை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் என்றார்.

    இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிஇஓவாக இருந்த தியரி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது விப்ரோ நிறுவனத்திற்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    12 ஆண்டுகளாக பெப்சி குழும நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #Pepsi #IndraNooyi
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் குளிர்பான சந்தையில் கொடி கட்டி பறக்கும் பெப்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    பெப்சி நிறுவன இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தலைவராக உள்ள லாகுவார்டா புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லாகுவார்டா வரும் அக்டோபர் மாதம் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

    கடந்த 24 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திரா நூயி, அடுத்தாண்டு வரை தலைவர் பொறுப்பில் தொடருவார் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த இந்திரா நூயி, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், கடந்த 2014-ம் ஆண்டு போர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13-வது இடத்திலும், 2015-ம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. 
    ×