search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராய ஊறல்"

    • ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சாராய ஊறல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பனந்தல் ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தலைமை யில் அப்பனந்தல் ஏரி அருகே சென்று சோதனை செய்தனர் அப்போது ஏரியில் சுமார் 900 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டு பிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டி யார்பாளையம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய சுந்தரத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை பகுதியில் குரும்பாலூர், குரும்பாலூர் ஏரிக்கரை உள்ளிட்ட மலை கிராம பகுதியில் சாராயம் காய்ச்சுவதாகவும், விற்பதாகவும் கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி பகலவன் உத்தரவின்பேரில் கச்சிராய பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மேற்பார்வையில் கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சாராய ரெய்டு செய்தனர்.

    கரியாலூர் 5 சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் மாரியப்பன் உள்ளிட்ட போலீசார் குரும்பாலூர் மற்றும் ஏரிக்கரை பகுதியில் சாராய ரெய்டு செய்தனர்.

    அப்போது 4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, அருணாசலம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ×