search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஷ்டி விழா"

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    • அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கந்த சஷ்டி முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    கந்த சஷ்டியொட்டி ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருக னடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிர மணியசாமி, வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

    காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், கைலாசகிரிமலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணியசாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளை யாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றி வேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில், கம்மவா ன்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விரைவில் திருமணம் நடைபெற செவ்வரளி மற்றும் செவ்வாழைப்பழம் வைத்து ஜாதகத்துடன்வைத்து வழிபட்டனர் .
    • ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வேலாயுத சாமியை தரிசனம் செய்தனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள செஞ்சேரிமலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மந்திரகிரிஸ்ரீ வேலாயுத சாமி கோவிலில் வளர் பிறை சஷ்டியை முன்னிட்டு திரிசங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடந்தது.

    மழை , உலக நன்மை,கல்வி, விவசாயம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ,திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வேலாயுத சாமியை தரிசனம் செய்தனர்.

    விரைவில் திருமணம் நடைபெற செவ்வரளி மற்றும் செவ்வாழைப்பழம் வைத்து ஜாதகத்துடன்வைத்து வழிபட்டனர் . இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    • கந்த சஷ்டி விழா வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின்5-ம் நாளான இன்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடக்கிறது.

    கந்த சஷ்டி விழா 

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. விழாயொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.

    உற்சவர் சுப்பிர மணியசாமி-தெய்வானை அம்மன் தினமும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி 7.30 மணி வரை நடக்கிறது. விழாவில் சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் சூரனை அழிக்க அம்மனிடம் சக்திவேலை சுப்பிரமணிய சுவாமி பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (30-ந் தேதி) மாலை 6 மணியளவில் திருப்பரங்கு ன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு சுப்பிரமணியசுவாமி, வீரபாகு தேவருடன் சூரனை அழிக்கும் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்ஹாரத்தை கண்டு மகிழ்வார்கள்.

    விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி காலையில் தேரோட்டமும், மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெறும். திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பு தினமான சித்திரை 1-ந் தேதியும், கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளிலும் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றுவது வழக்கம்.

    அதுபோல் தற்போது கந்தசஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில் வருகிற 31-ந் தேதி மாலை 3 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×