search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலவை கூடம்"

    • விருதுநகர் மாவட்டத்தில் நவீன சலவை கூடங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
    • குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

    குழு உறுப்பினர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். குழுவில் 10 நபர்கள் இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    விருப்பமும், முன் அனுபவமுள்ளவர்கள் குழுவாக சேர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ.பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சலவை கூடத்திற்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித்தரப்படும், தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.

    இதைத்தொடர்ந்து 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகரச் செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூர் துணைச்செயலாளர் ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செல்வராணி, ஜெயராமச்சந்திரன், ஒன்றிய, பேரூர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும், மகளிரணி அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.

    ×