நவீன சலவை கூடங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் நவீன சலவை கூடங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நவீன சலவை கூடங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.

குழு உறுப்பினர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். குழுவில் 10 நபர்கள் இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விருப்பமும், முன் அனுபவமுள்ளவர்கள் குழுவாக சேர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com