search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைத்தளங்கள்"

    • உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.
    • 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.திருமணம் முடிந்து வந்த போது அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவரது வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரன்ஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    சிசிடிவி., காட்சிகள் அடிப்படையில் மங்கலம் போலீசார் திருடர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து திருடி செல்லும் சிசிடிவி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது
    • சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    நாகர்கோவில் :

    மண்டைக்காடு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் முரளிதரன்.

    இவர் நடுவூர் கரையில் புகார் மனு ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரனிடம் அத்துமீறி பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் திடீரென இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்துள்ளார்.

    மண்டைக்காடு போலீஸ் நிலையத்திலிருந்து சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    ×