search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமர் ஜோசப்"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமர் ஜோசப்பின் சிறப்பான பந்து வீச்சால் சமநிலையில் முடிந்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிளான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் சமர் ஜோசப்பின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த சமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் சமர் ஜோசப்புக்கும் கிடைக்கும்.

    அத்துடன் இந்த ஒப்பந்தத்தால் வரும் காலங்களில் வெஸ்ட் இண்டீஸ்க்காக நிறைய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும். அதே போல 2024 டி20 உலகக் கோப்பையில் அவருடன் சேர்ந்து வேலை செய்ய உள்ளதாக பயிற்சியாளர் டேரன் சமி அறிவித்துள்ளார்.

    • 17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    • 27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்வதற்கு சமர் ஜோசப் முக்கிய பங்காக இருந்தவர்.

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது. 17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) போட்டி அட்டவணையை அறிவிக்க முடியாமல் இருக்கிறது.

    இந்த ஐபிஎல் சீசனில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய நாயகனாக வலம் வரும் சமர் ஜோசப்பை ஆர்சிபி அணி வாங்குவதற்கு திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024-ம் ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட டாம் கரண் காயம் காரணமாக விளையாடமுடியாத சூழல் இருப்பதால் அவருக்கு பதிலாக ஜோசப்பை எடுக்க ஆர்சிபி திட்டம் தீட்டியுள்ளது.

    27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை பதிவு செய்வதற்கு சமர் ஜோசப் முக்கிய பங்காக இருந்தவர். அவர் அந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×