search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்முகநாதன் எம்எல்ஏ"

    அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றிய, நகர அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் நடைபெற்றது. ஞானபிரகாசம், கிளைச் செயலாளர் திருமணவேல், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவ பாண்டியன், மாணவரணி செயலாளர் ஸ்டான்லி ஞான பிரகாஷ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன். புதுக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாலமேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். 

     கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 400 பேருக்கு சேலைகளும், 100 பேருக்கு வேஷ்டியும் மற்றும் அப்பகுதியில் கல்வியில் தேர்ச்சி பெற்ற 8 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாட்ச் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி பேசினார். 

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் நடராஜன், கருணாநிதி, அப்துல்ஹமீது, பழனிகுமார், பொன்ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் சண்முகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பொன் முருகேசன், திருமணவேல், தொடக்க கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.  

    கூட்டத்தில் மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர் திருபாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகநயினார், ராஜ் நாராயணன், மாவட்ட மகளிரணி செரீனா பாக்யராஜ், முன்னாள் யூனியன் துணை சேர்மன் ஜெயராணி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அகமது இப்ராகிம், பாண்டிராஜ், அப்துல்ரஷீத், பிள்ளைவிளை பால்துரை, கார்த்தீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் தட்டார்மடம் சந்திரசேகர் நன்றி கூறினார்.
    முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியை சண்முகநாதன் எம்.எல்.ஏ.புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shanmuganathanmla #edappadipalanisamy

    தூத்துக்குடி:

    நாகர்கோவிலில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவுக்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் புறக்கணித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரத்தில் சண்முகநாதனுக்கும் கட்சி தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் இது தொடர்பாக சண்முகநாதன் எம்.எல்.ஏ அளித்த பேட்டியில்," முன்பு வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவிப்பார். தற்போது, பொறுப்பில் உள்ளவர்கள் பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இருந்தால், அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கட்சி தலைமை அறிவித்து உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் தலைகீழாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சியில் இருக்கும் கவனத்தை கட்சியில் செலுத்தவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.


    இது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியை சண்முகநாதன் எம்.எல்.ஏ. புறக்கணித்திருப்பதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Shanmuganathanmla #edappadipalanisamy

    ×