search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்காபிஷேகம்"

    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவிலில் 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. 108 சங்குகள் சிவலிங்கம் போல் வைத்து யாகம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. 108 சங்குகள் சிவலிங்கம் போல் வைத்து யாகம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. யாக பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சாமி கோவில் உள்ளது. பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    தொடர்ந்து கடங்கள் ஊர்வலமாக மகாலிங்க சாமி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வார சிறப்பு வழிபாட்டில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கட்டளை ஸ்தானிகம் அம்பலவாண தம்பிரான் சாமிகள், கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டது.
    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் உள்ள புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சிறப்பு யாகம், 108 சங்காபிசேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கார்த்திகை சோம வாரம் (திங்கட்கிழமை) சிவனுக்கு உகந்த நாளாகும். சோம வாரத்தில் சிவனுக்கு சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து, அதனை அபிஷேகம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

    காசிக்கு இணையான தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 1,008 சங்குகள் கொண்டு அபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தலவரலாறு கூறுகிறது. நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி இக்கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சிவலிங்க வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    அதில் புனித நீர் நிரப்பப்பட்டு, யாக பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து சாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ரவி, நாடி நிபுணர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கழிவறை, குளியலறை ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.
    தஞ்சை பெரியகோவிலில் வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.
    கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்குகளில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் புனித தலங்களின் மண் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் நிறைந்த கலயம் மற்றும் சங்குகளுக்கு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
    முருகனின் ஆறுபடைவீடுகளில் 4-வது படைவீடான சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் சிறப்புடையது. கட்டுமலையால் ஆன இத்தலத்தைப் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் குறிப்பிட்டு உள்ளனர். பிரசித்தி பெற்ற சுவாமிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

    விழா நாட்களில் காலை, மாலை நேரத்தில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சூரசம்ஹார தினமான நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்கள் கோவிலுக்குள் வழிபட அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலை முதல் இரவு வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி, கோவில் உள் பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
    புதுவை மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவின் 4ம் ஆண்டையொட்டி, சகஸ்கர சங்காபிஷேக விழா நாளை (20-ந்தேதி) நடக்கிறது.
    புதுவை மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவின் 4ம் ஆண்டையொட்டி, சகஸ்கர சங்காபிஷேக விழா நடக்கிறது. 20-ந்தேதி மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை, முதல்கால யாக பூஜை நடக்கிறது. 21-ந்தேதி காலை 7.30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு 1008 சங்காபிஷேகம், உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதியுலா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அதிகாரி வெங்கடேசன் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
    ×