search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி.
    X
    புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி.

    தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்

    தஞ்சை பெரியகோவிலில் வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.
    கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்குகளில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் புனித தலங்களின் மண் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் நிறைந்த கலயம் மற்றும் சங்குகளுக்கு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    Next Story
    ×