என் மலர்

  ஆன்மிகம்

  சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது
  X
  சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது

  சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
  முருகனின் ஆறுபடைவீடுகளில் 4-வது படைவீடான சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் சிறப்புடையது. கட்டுமலையால் ஆன இத்தலத்தைப் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் குறிப்பிட்டு உள்ளனர். பிரசித்தி பெற்ற சுவாமிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

  விழா நாட்களில் காலை, மாலை நேரத்தில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சூரசம்ஹார தினமான நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்கள் கோவிலுக்குள் வழிபட அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலை முதல் இரவு வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

  நேற்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி, கோவில் உள் பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
  Next Story
  ×