search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் குண்டம்"

    • நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
    • நாளை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    அந்தியூர்,

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மிக விமரிசையாக குண்டம்- தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொட ங்கியது. இதனையடுத்து மகிசாசுவரா வர்தன நிகழ்வும், தொடர்ந்து கொடி யேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவையொட்டி தினமும் சாமி முக்கிய வீதிகள் வழியாக ஒவ்வொரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 6 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதனால் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் குண்டம் இறங்க கோவிலல் வளாகத்தில் தங்கி இருந்து வருகிறார்கள்.

    முன்னதாக நாளை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் வளர்க்கப்படுகிறது.

    விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் செய்து கொடுத்து வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான விறகுகளை காணிக்கை யாகவும் செலுத்தி வருகின்றார்கள்.

    அந்த விறகுகள் கோவில் வளாகத்தில் மலை போல் குவிந்து இருக்கின்றது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோவிலில் இன்று காலை குண்டம் விழா நடந்தது.
    • பக்தர்கள் பலர் அழகு குத்தி வந்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் அழகு முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் குண்டம்- தேர் திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது.

    இதை தொடர்ந்த இந்த ஆண்டுக்கான குண்டம்- தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28-ந் தேதி கொடிசேலை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி தினமும் சுவாமி சிங்கம் வாகனம் அன்ன பச்சி, காமதேனு, புலி, குதிரை, சட்டத்தேர், யானை, தொப்ப செட்டி ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை குண்டம் விழா நடந்தது. இதில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு குண்டம் தீ மிதித்தனர். மேலரும் பக்தர்கள் பலர் அழகு குத்தியும் வந்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி யும், இரவு சிங்காசனத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9-ந் தேதி காலை அக்கினி கரகம் எடுத்து வருதல், அதனைத் தொடர்ந்து கம்பம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

    ×