search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டியது"

    • ஈரோடு மாவட்டத்தில் காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • இதேபோல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கனமழை காரணமாக பெரும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக அந்தியூர் வரட்டு பள்ளம் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சத்தியமங்கலம்- கடம்பூர் ஆசனூர் போன்ற மலை கிராமங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்கு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், ஏரி, குளங்கள் குட்டைகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு லேசாக சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    வழக்கம்போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளித்தது. மேலும் சேறும் சகதியுமாக இருந்ததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் இன்று காலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கனமழை காரணமாக பெரும் அவதி அடைந்தனர். பெற்றோர்கள் சிலர் தங்களது குழந்தை களை குடை பிடித்தப்படிய பள்ளிக்கு அழைத்து சென்றனர். சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். கோபி -குண்டேரி பள்ளம் தாளவாடி கொடுமுடி போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    ×