search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே. டி. ராமராவ்"

    • பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
    • தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என கூறினார்

    பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.

    சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். அவர் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரசில் பணியாற்றியபின் 1939 -ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே. டி. ராமாராவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "வடக்கில் ஒரு பா.ஜ.க வேட்பாளர் சுபாஷ் சந்திர போஸ் தான், இந்தியாவின் முதல் பிரதமர் என்கிறார். தெற்கில் ஒரு பா.ஜ.க தலைவர், மகாத்மா காந்தி தான் முதல் பிரதமர் என்கிறார். இவர்கள் எல்லாம் எங்கு கல்வி கற்றார்கள்?" என்று பதிவிட்டுள்ளார். 

    ×