search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூந்தல்"

    • பெரும்பாலான பெண்கள் தலைமுடி உதிர்தல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர்.
    • ஆரோக்கியமான முடிக்கு நல்லதாகக் கருதப்படும் பல விதைகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

    முடி உதிர்தல் பிரச்சனையால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்த விதையை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும், சில நாட்களில் வித்தியாசத்தை உணர்வீர்கள். அது என்ன விதை? எப்படி சாப்பிடுவது? என்பதை பார்க்கலாம் வாங்க..

    பெரும்பாலான பெண்கள் தலைமுடி உதிர்தல் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். முடி உதிர்தல் காரணமாக, முடி மெல்லியதாகவும் பலவீனமாகவும் மாறும். இதன் காரணமாக தோற்றமும் மோசமடைகிறது. பெரும்பாலும் பெண்கள் முடி உதிர்வை போக்க பல்வேறு வகையான சீரம், எண்ணெய் மற்றும் பல முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால், உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், உங்கள் முடி உதிர்தல் பிரச்சனையை முடி பராமரிப்பு பொருட்களால் கூட தீர்க்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

    முடி கொட்டினாலும் சரி, சரும பிரச்சனையாக இருந்தாலும் சரி, அது நமது உணவு முறையோடு நேரடியாக தொடர்புடையது. ஆரோக்கியமான முடிக்கு நல்லதாகக் கருதப்படும் பல விதைகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவற்றில் உள்ள சத்துக்கள் முடியை வலுவாக்கி, முடி உதிர்வு பிரச்சனையை குறைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு விதையைப் பற்றி இங்கே காணலாம்.

    சாரைப் பருப்பு (chironji seeds) முடி உதிர்வை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சாரைப் பருப்பு பயன்படுத்துவதால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும். ஆம், சாரைப் பருப்பு சுவையை நீங்கள் அடிக்கடி இனிப்பு உணவுகளில் சேர்த்து ருசித்திருப்பீர்கள். நிபுணர்களின் ஆலோசனையின்படி, சாரைப் பருப்பை உட்கொண்டால் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

    இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சாரைப் பருப்பில் ஏராளமாக காணப்படுகின்றன. இதில் நல்ல கொழுப்புகளும் ஏராளமாக உள்ளது. புரோட்டீன் முடி ஆரோக்கியத்திற்கு அவசியம் மற்றும் அதில் அதிக புரதம் உள்ளது. முடியை வலுப்படுத்தவும், உடைவதைத் தடுக்கவும் இது நல்லது என்று கருதப்படுகிறது. சாரைப் பருப்பு சாப்பிடுவது முடி உதிர்வை குறைக்கிறது. இதில் உள்ள பண்புகள் முடிவேர்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

    சாரைப் பருப்பு சாப்பிடுவதுடன், அதன் எண்ணெயையும் தடவுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். சாரைப் பருப்பு ஹேர் மாஸ்க் முடியை சீரமைப்பதற்கு நல்லது என்று கருதப்படுகிறது. முடியைத் தவிர, செரிமான அமைப்புக்கும் நல்லது. சாரைப் பருப்பு நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடலுக்கு வலிமை அளிக்கிறது

    சாரைப் பருப்பு எப்படி சாப்பிடுவது?

    2 டீஸ்பூன் சாரைப் பருப்பை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும் சாப்பிடுங்கள். இதை தொடர்ந்து 4 வாரங்கள் செய்யவும். முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

    • ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும்.
    • வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம்.

    வயதாகும் போதும், சில சத்துக்கள் குறைபாடு மற்றும் பரம்பரை அறிகுறிகள் காரணமாகவும் தலைமுடி நரைப்பதுண்டு. இதற்கு சந்தையில் கிடைக்கும் தைலங்கள், பவுடர்களில் ரசாயனம் கலந்திருக்கும். இது பலருக்கு தோல் அலர்ஜி மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும். இதை தவிர்த்து நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம். ஹோம்மேட் ஹெர்பல் ஹேர் டை செய்து கொண்டு, அதைப் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படும். இதைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    இயற்கை டை 1:

    தேவையானவை: தேயிலைப் பொடி, கொட்டைப் பாக்குப் பொடி, கறுப்பு வால்நட் பொடி - தலா 3 டீஸ்பூன்.

    செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான மூன்று பொருட்களையும் கொட்டி, வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். இதைக் கேசத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். பிறகு, கேசத்தை நன்றாக உலர்த்தி, இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைப் பூசிவரவும். விரைவிலேயே நரைமுடியிலிருந்து விடுபட்டு கருமையான முடிகளைப் பெறலாம். இந்தச் செய்முறையில் வெந்நீருக்குப் பதிலாக, பொடிகளை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி, தேநீர்போலவும் தயாரித்து கேசத்தில் பூசலாம்.

    இயற்கை டை 2:

    தேவையானவை: மருதாணி இலை - கைப்பிடி அளவு, நெல்லிக்காய் - 2, காபிக் கொட்டை - சிறிதளவு, கொட்டைப்பாக்குப் பொடி - 3 டீஸ்பூன்.

    செய்முறை: அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த விழுதைக் கேசத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வரவும்.

    பட்டுக் கூந்தலுக்கு... பளிச் டிப்ஸ்

    இயற்கை டை 3:

    தேவையானவை: வால்நட் பொடி - 3 டீஸ்பூன், அவுரி இலை - சிறிதளவு, சாமந்திப்பூ - சிறிதளவு, ரோஸ்மெர்ரி இலைகள் (உலர்ந்தது) - சிறிதளவு. இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

    செய்முறை: அனைத்தையும் நன்றாக உலர்த்திப் பொடி செய்து, தேநீர் போன்று காய்ச்சி வடிகட்டவும். இந்த நீரை முடியில் தடவி, வெயிலில் நன்றாக உலர்த்தவும். பிறகு அலசிவிடவும். கருமை நிறம் அப்படியே நீடித்திருக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த நீரைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.

    இயற்கை டை 4:

    தேவையானவை: ஆற்றுத்தும்மட்டி பழச் சதை - 1 கப், நெல்லிப்பழச் சதை - 1 கப், கரிசாலை இலை விழுது - 1 கப், தேங்காய் எண்ணெய் - 500 மி.லி.

    செய்முறை: பழச் சதையையும், கரிசாலை இலை விழுதையும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சவும். இந்த விழுது கரகரப்பாக மாறும் பதத்தில் இறக்கி, வடிகட்டி, ஆறவைக்கவும். தினமும் இந்த எண்ணெயை முடிப்பராமரிப்புக்குப் பயன்படுத்தினால், நாளடைவில் இளநரை குறைந்து, கூந்தல் கருமையாக வளரும். கேசத்தை அலச, சீயக்காய் பொடி அல்லது `உசில்' என்னும் அரக்குப் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.

    பட்டுக் கூந்தலுக்கு... பளிச் டிப்ஸ்

    இயற்கை டை 5:

    தேவையானவை: செம்பருத்தி இலை, கரிசலாங்கண்ணி இலை, மருதாணி இலை, அவுரி இலை - தலா கைப்பிடி அளவு, வெந்தயம் - 3 டீஸ்பூன்.

    செய்முறை: அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து, சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு இவற்றைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைக் கேசத்தில் பூசிவர, கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

    • மாதம் ஒருமுறை முடியை மிகக்குறைந்த அளவு ட்ரிம் செய்ய வேண்டும்.
    • சீப்பால் தலையைச் சீவும்போது, தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

    * 300 மி.லி தேங்காய் எண்ணெயில் 150 மி.லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி வடிகட்டி, பெண்கள் 21 நாட்கள் தலையில் தடவிவந்தால், தலைமுடி நன்றாக வளரும்.

    * வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைப் பகுதியைத் தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து உலர வைத்துக் குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வளரும். முட்டையின் வெள்ளைப் பகுதியில் உள்ள ஊட்டச்சத்துகள், முடியின் வேர்க்கால்களைச் சரிசெய்யும் தன்மை கொண்டவை. மேலும், முடியை மென்மையாகவும் பொலிவோடும் வைக்கும்.

    * ஆண்கள், கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிப்பதற்கு முன்பு, தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்துவந்தால், இளமையில் ஏற்படும் தலை வழுக்கை நீங்கி முடி வளரும்; இளநரை குறையும்.

    * முடி வளரும்போது, முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால், முடியின் வளர்ச்சி குறையத் தொடங்குகிறது. மாதம் ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதால் முடியின் வலிமை அதிகரிக்கும். மாதம் ஒருமுறை முடியை மிகக்குறைந்த அளவு ட்ரிம் செய்ய வேண்டும்.

    * வாரம் ஒருமுறை தவறாமல் தேங்காய் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து, நன்கு ஊறவைத்துக் குளிக்க வேண்டும். இதனால், முடிக்கு வேண்டிய சத்துகள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

    * சீப்பால் தலையைச் சீவும்போது, தலைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆண்கள் தினமும் மூன்று முதல் நான்கு முறை தலைக்குச் சீப்பைப் பயன்படுத்தித் தலை சீவலாம். இதனால், முடியின் வேர், புத்துணர்ச்சியுடன் இருக்கும். கூர்மையான பிளாஸ்டிக் சீப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மிருதுவான முதல் தர பிளாஸ்டிக் அல்லது மரச் சீப்பைப் பயன்படுத்தலாம்.

    * கோடை காலங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முடியின் மீது சூரிய ஒளி நேரடியாகப் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். சூரியக் கதிர்கள் தலைப்பகுதியைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். இந்த நேரத்தில் புறஊதா பி கதிர்கள் முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி வறட்சியை ஏற்படுத்தும். எனவே, வெளியே செல்லும்போது தலைக்குத் தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டோ செல்லலாம்.

    * பெண்கள், தங்களது அடர்ந்த கூந்தல் ஈரமாக இருக்கும்போது, தலைக்குச் சீப்பு பயன்படுத்த வேண்டாம். முடி ஈரமாக இருக்கும்போது வலிமை இழந்து இருக்கும். அப்போது, சீப்பைப் பயன்படுத்தினால், முடி வேரோடு வந்துவிடும். முடி உலர்ந்த பின்னரே சீப்பு பயன்படுத்த வேண்டும்.

    * அதீத வெப்பம் தலைமுடியைப் பாதிக்கும். தலைக்குக் குளித்த பின்னர், முடியை உலரவைக்க பலர், எலெக்ட்ரானிக் ஹேர் டிரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படிப் பயன்படுத்துவதால், முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். இவ்வாறு தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கை ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. எனவே, எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலரவைப்பதுதான் நல்லது. தலைக்குக் குளித்தவுடன் வெயிலில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * வெங்காயத்தை நீரில் வேகவைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம். வெங்காயச் சாற்றைக்கொண்டு முடியை மசாஜ் செய்து, ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம், முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

    * கண்டிஷனர் முடிக்கு நல்லதுதான். ஷாம்பு, சிகைக்காய் பயன்படுத்துவதால் ஏற்படும் வறட்சியைப் போக்கி, முடியை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். தரமற்ற கண்டிஷனர் முடியின் வேர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையான கண்டிஷனரானத் தயிரைப் பயன்படுத்தலாம். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

    * குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். அதற்கும் குறைவாகத் தூங்கினால், முடி ஆரோக்கியத்தை இழந்துவிடும். தினமும், போதிய அளவு தூங்குங்கள். இதனால் முடியின் ஆரோக்கியமும் அடர்த்தியும் அதிகரிக்கும்.

    * தினமும் தலைக்குக் குளித்தால், தலையில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசை வெளியேறிவிடுவதோடு, முடி, பொலிவை இழந்துவிடும். முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்துக்கு இரண்டு முறை தலைக்குக் குளித்தால் போதும்.

    * காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால், முடியின் வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிக்கும். முடியின் வேர்கால்களில் இயற்கையான எண்ணெய்ப் பசை நிலைத்திருக்கும்.

    • ஹேர் டை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவும்.
    • தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும் என்பது மூட நம்பிக்கை.

    சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்... போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மாதுளை ஜூஸ், உலர்ந்த திராட்சை, உலர் அத்திப்பழம் சாப்பிடுவது மிக நல்லது.

    வாரத்துக்கு ஒரு நாளைக்காவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியம்.

    தினமும் தலைக்குக் குளித்தால் முடி கொட்டும் என்பது மூட நம்பிக்கை. தலைக்குக் குளிப்பது முடியை வளர்க்கும் என்பதே உண்மை.

    சிறு வயதிலிருந்தே வீட்டில் அடிக்கடி சுண்டல், நவதானியச் சத்துமாவுக் கஞ்சி, சிறுதானிய உணவு, பீன்ஸ், அவரை முதலான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது, முடி கொட்டும் குறைபாட்டைத் தடுக்கும்.

    பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள சரும உலர்வால் ஏற்படுவதே தவிர, பூச்சித் தொற்று காரணம் கிடையாது. இதைத் தவிர்க்க, 'பொடுதலை' என்ற மூலிகையின் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, வாரம் 2-3 நாட்கள் தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். Scalp Psoriasis எனும் தோல் நோயை பலரும் பொடுகுத் தொல்லை எனத் தவறாக நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர். பொடுகுத் தொல்லை அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

    சிலர் தொடர்ந்து தலைக்கு 'டை' அடித்துக்கொள்வார்கள். கேட்டால், 'இயற்கையான மூலிகை டைதான் போடுகிறோம்' என்பார்கள். 100 சதவிகித 'மூலிகை டை' என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை. கருப்பு வண்ணம் தரும் நிறமி மட்டும்தான் மூலிகை. அதைத் தலையில் நிறுத்துவது ரசாயனக் குழம்பே! எனவே, டை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்கவும். அதைத் தவிர்ப்பதே நல்லது.

    • இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது.
    • கற்றாழை ஜெல் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது.

    கற்றாழையில் முடி வளர்ச்சியை தூண்டும் என்சைம்கள் உள்ளன.கற்றாழை நமக்கு இயற்கை தந்த மாமருந்து. அவை தலையில் உள்ள இறந்த செல்களை அழித்து புது செல்களை வளர செய்கின்றன. எப்போதும் தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.

    கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு தரும் தாவரம் கற்றாழை. கற்றாழையில் கூந்தலுக்கு அத்தியாவசியமான 100 விதமான போஷாக்குகள் அடங்கியுள்ளன. கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

    இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கற்றாழையில் இருந்து எடுத்த கற்றாலை ஜெல் மிக நல்லது. தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

    தலையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை குறைக்க கற்றாழை பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் பூசுவதன் மூலம் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது.

    கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டது. அதனால் அதை தலையில் தடவும் போது வெப்பத்தை குறைத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது. முடியை மென்மையாக்கவும் வலிமையாக்கவும் கற்றாழை பயன்படுகிறது. தலையில் அதிக எண்ணெய் சுரத்தல் அல்லது வறட்சியாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

    முடி உதிர்தலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கற்றாழை தந்து, முடியை பாதுகாக்கிறது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கற்றாழை தலை முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது. எனவே கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும். இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.

    வாரத்தில் ஒரு நாள் வீதம் பத்து முறை இந்த ஹேர் பேக்கை போட்டு விட்டு உங்களுடைய தலைமுடியில் ஏற்படும் நல்ல மாற்றத்தை தெரிந்து கொள்ளலாம்.

    தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தலைப் பெறலாம். இது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் கற்றாலை ஜெல் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு 1/4 கப் கற்றாலை ஜெல் இருந்தால் அதில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் (Castro-oil) சேர்த்து நன்றாக கலந்து இந்த ஜெல்லை உங்களுடைய தலையின் மண்டையோட்டில் படும்படி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

    அதாவது மயிர்க்கால்களில் இந்த கற்றாலை ஜெல் நன்றாக படவேண்டும். அதன் பின்பு முடிக்கு மேல் பக்கம் மேலிருந்து கீழ் பக்கம் வரை முடி முழுவதும் இந்த ஜெல்லை பூசிக் செய்து கொள்ளவும். 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இந்த ஜெல் உங்களுடைய தலையில் ஊறலாம். அதன் பின்பு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளிக்கவும். இப்படி வாரத்தில் ஒருநாள் செய்தாலே போதும். மாதத்தில் 4 நாட்கள் கணக்கு வரும். மொத்தமாக 3 மாதத்தில் உங்களுடைய தலைமுடியில் வித்தியாசத்தை காண முடியும். விளக்கெண்ணெய்க்கு பதிலாக தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் அல்லது முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்ளலாம்.

    ஹேர் பேக்கை பூசி கொள்வதற்கு முன்பாக தலையில் இருக்கும் சிக்கு அனைத்தையும் எடுத்து விட வேண்டும். தலையில் கட்டாயமாக நீங்கள் எப்போதும் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்புதான் ஹேர் பேக் அப்ளை செய்ய வேண்டும்.

    • பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கூந்தல் உதிர்வு.
    • கூந்தல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.

    தினமும் குளிப்பது பல் துலக்குவது போல தினமும் இரண்டு தலை சீவ செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் முடி ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

    காலை ஒரு முறை இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு முறை என தினமும் இரண்டு முறை தலை முடியை சீவினால் தலைமுடி பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்

    தினமும் இரண்டு முறை தலை சீவினால் இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள ஆகியவை சுத்தமாகும்.

    மேலும் தலைமுடியை சீவினால் அது முடியின் அளவை அதிகரிக்கப்பதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

    என்னதான் அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக்கூடாது.டவலால் நன்கு துடைத்து ஈரம் போய் தலைமுடி காய்ந்த பின்பு நல்ல தரமான சீப்புகளால் தலைசீவ வேண்டும்

    மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்

    இரவு படுக்கும்முன் கூந்தலை மென்மையாக வாரிவிட்டு படுக்க வேண்டும்.இது தலைமுடி நன்கு வளர உதவும்

    கூந்தலை ப்ளீச் செய்வது கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

    • காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும்.
    • இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்.

    சீரான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு 'ஸ்கால்ப்' எனப்படும், தலைப்பகுதியில் இருக்கும் சரும அடுக்கை சுகாதாரமான முறையில் பராமரிப்பது முக்கியம். ஸ்கால்ப் பகுதியில் மயிர்க்கால்கள், செபேசியஸ் எனும் எண்ணெய் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து உற்பத்தியாகும் வியர்வை மற்றும் எண்ணெய்யுடன் காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும். இதை அவ்வப்போது சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று, தலைமுடி வறட்சி, முடி உதிர்வு, பொடுகு, பேன் தொல்லை, தோல் தடிப்பு, அழற்சி, பூஞ்சைத் தொற்று, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும். இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். அவை:

    ரசாயனம் இல்லாத ஷாம்பு: ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் செபேஷியஸ் சுரப்பியில் சுரக்கும் இயற்கையான எண்ணெய், தலைமுடி வறட்சி அடையாமல் பளபளப்பாக இருக்க உதவும். ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருக்கும் சல்பேட், இந்த எண்ணெய்யை நீக்கி வறட்சியை உண்டாக்கும். பாரபின் வீக்கம், அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, நாம் பயன்படுத்தும் ஷாம்பு இந்த எண்ணெய்யை முற்றிலும் நீக்கக் கூடிய ரசாயனங்கள் இல்லாமலும், மென்மையாகவும், ஸ்கால்ப் பகுதிக்கு நீரேற்றம் அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஷியா பட்டர் கலந்த ஷாம்பு இதற்கு உதவும்.

    ஸ்கால்ப்பை சுத்தப்படுத்துதல்: நாம் வெளியில் செல்லும்போது சுற்றுச்சூழல் மற்றும் வாகனங்கள் மூலம் வரும் மாசு, இறந்த சரும செல்கள், அழுக்கு போன்றவை ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய்யுடன் கலந்து சருமத் துளைகளை அடைத்துவிடும். இது ஸ்கால்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகரித்து, நோய்த்தொற்றை உண்டாக்கும். இதைத் தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை தலைக்கு குளித்து ஸ்கால்ப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    புற ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாத்தல்: முகம், கை, கால்களைப் போல ஸ்கால்ப்பும் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்படும். எனவே, வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது தலைப்பகுதியை மூடியவாறு செல்வது நல்லது. ஸ்கால்ப்புக்கு தனியாக தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.

    'ஸ்கால்ப்' ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 'மாஸ்க்' : மரச்செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய்யை மிதமாக சூடுபடுத்தி ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு விரல் நுனியால் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவவும். பின்னர் ஸ்கால்ப் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யவும். 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு, 1 முட்டை, ½ கப் தயிர், இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விரல் நுனிகள் மூலம் எடுத்து ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு, சூடான தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துண்டை தலையை மூடியவாறு கட்டிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.

    • கறிவேப்பிலை துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வர முடி உறுதியாகும்.
    • கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டிக் காய வைக்க வேண்டும்.

    கறிவேப்பிலையை உண்பதால் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்சனை சரியாகும். நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும்.

    இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்துவர முடி வளரும். இளநரை சரியாகும்.

    மூன்று நெல்லிக்காயுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து, வடிகட்டி குடித்து வரலாம். வலுவான, அடர்த்தியான கூந்தலாக மாறும்.

    கறிவேப்பிலை துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வர முடி உறுதியாகும். முடி உதிர்தல் பிரச்சனை தடுக்கப்படும்.

    கறிவேப்பிலை இலைகளை அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உருட்டி 40 நாள்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, முடி நன்றாக வளரும்.

    கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டிக் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தொடர்ந்து தலைக்குத் தேய்த்துவர, முடி செழுமையாக வளரும்.

    கறிவேப்பிலையைக் காய்ச்சி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தொடர்ந்து தேய்த்து வர, முடி நன்கு வளரும்.

    கறிவேப்பிலைச் செடியில் இருந்து இலைகளுடன் கூடிய குச்சியை வெட்டிக் காயவைக்கவும். இலைகள் உதிரும்வரை காத்திருக்க வேண்டும். இலைகள் உதிர்ந்ததும் அவற்றை எடுத்து, அத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அவ்வப்போது இந்தப் பொடியைத் தலைக்குத் தேய்த்து வந்தால், நரை பிரச்னைகள் நீங்கும்.

    கறிவேப்பிலையுடன் 2 மிளகு சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தலையில் உள்ள பொடுகு குணமாவதோடு முடியும் செழித்து வளரும்.

    • முடியின் வளர்ச்சி தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது.
    • சிலருக்கு தலை முடியை பிடித்து இழுத்தாலே முடி கொத்தாக வரும்.

    முடியின் வளர்ச்சி மிக முக்கியமானதாக எப்போதும் கருதப்படுகிறது. மேலும் முடியின் வளர்ச்சி தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது. அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகம் கொட்ட வைக்கிறது. முடிகள் அதிகமாக கொட்டுகிறது என்றால், நீங்கள் உங்கள் முடியிற்கு அதிக அழுத்தத்தை தருகிறீர்கள் என்று அர்த்தம்.

    சிலருக்கு தலையை சீப்பால் சீவினால் முடி கொத்து கொத்தாக கொட்டி கொண்டேயிருக்கும். இன்னும் சிலருக்கு தலை முடியை பிடித்து இழுத்தாலே முடி கொத்தாக வரும். இன்னும் சிலர் தலை குளித்து விட்டு வந்தால் பாத்ரூம் முழுவதும் முடி உதிர்ந்து காணப்படும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் முடி கொட்டி இளம் வயதிலேயே தலையில் வழுக்கையுடன் காணப்படுவர். இதற்கு சில முக்கிய காரணங்களை பட்டியலிட்டுள்ளோம்

    1. அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பது முடி உதிர காரணமாக அமைகிறது

    2. எப்போதும் அதிக சூடுள்ள சுடுநீரில் குளிப்பது கூட தலை முடி உதிர வழி வகுக்கும்

    3. நீச்சல் குளம் போன்ற இடங்களில் குளோரின் நிறைந்த தண்ணீர் இருக்கும் அதில் குளித்தால் முடி உதிரும்

    4. சில இடங்களில் உப்பு நீர் இருக்கும். இந்த தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலைமுடி உதிரலாம்.

    5. நம் உடலுக்கு தேவையான சரியான அளவு வைட்டமின் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்கள் இல்லாவிட்டால் கூட முடி உதிரலாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    6. தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ளாதோருக்கு முடி உதிரும்

    7. தினமும் தலைக்கு குளித்து தலையில் பேன், பொடுகு, சிக்கு இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் முடி உதிரவே உதிராது.

    இயற்கையான பொருட்கள் பயன்படுத்தினாலே முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், தலையில் அழுக்குகள் சேர்ந்தால் தலையை உடனே அலசிவிட வேண்டும்.

    சத்தான உணவுகளை தவிர்த்து வந்தால், அது உங்கள் உடல் நலனை மட்டுமல்ல முடியின் ஆரோக்கியத்தையும் முற்றிலுமாக குறைத்து விடும். உண்ணும் உணவில் ஊட்டசத்துக்கள் இல்லையென்றால், அதில் எந்த நன்மையையும் இல்லை.

    தலை குளித்து முடித்த பின்னர் கூந்தலை காய வைக்க ஹேர் ட்ரையரை பயன்படுத்தினால், முடியை அவை உடைய செய்து விடும். முக்கியமாக இந்த ஹேர் ட்ரையர்கள் முடியின் அடி வேரையே பாதித்து முடி கொட்ட செய்து விடும். எனவே, முடியில் ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

    • தரமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்.
    • சுருள் தலைமுடிக்கு பிரஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

    அசைந்தாடும் அழகான சுருள் முடியை தற்போது பல இளம் பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காக அழகு நிலையங்களில் பல மணி நேரம் செலவிடுவார்கள். தலைமுடியை இவ்வாறு அலங்கரிப்பதற்கு ஸ்ட்ரெயிட்னர், கேர்லர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இவற்றை அடிக்கடி உபயோகிப்பதால் தலைமுடி வலுவிழக்கும். இவற்றை தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான குறிப்புகள் இங்கே...

    சுருள் முடி பராமரிப்பு: தரமான கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள். பருத்தி துணிக்கு மாற்றாக, சாட்டின் துணியால் தயாரிக்கப்பட்ட தலையணை உறைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் கூந்தல் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உடைவதைத் தடுக்க முடியும். தலைமுடி வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுருள் தலைமுடிக்கு பிரஷ் உபயோகிப்பதைத் தவிர்க்கவும். பெரிய பற்கள் கொண்ட சீப்பு அல்லது கை விரல்களால் நிதானமாக சிக்கு எடுக்கவும். மரத்தால் ஆன சீப்பு பயன்படுத்துவது நல்லது.

    கூந்தல் சீரம் என்றால் என்ன?

    கூந்தல் சீரம் என்பது 'சிலிக்கான்' என்ற பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் திரவமாகும். இது முடியின் மீது ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, கூந்தலை சிக்கு இல்லாமல் ஈரப்பதத்துடன் மென்மையாக வைத்திருக்க உதவும். இதற்கு முதலில் தலைக்கு குளித்து, கூந்தலை நன்றாக உலரவைத்து சிக்கு இல்லாமல் வாரிக் கொள்ள வேண்டும்.

    செய்முறை - 1 கூந்தலில் சீரம் தடவி சற்று ஈரப்பதமாக இருக்குமாறு செய்யுங்கள். பின்பு கூந்தலை 4 பகுதிகளாகப் பிரியுங்கள். பின்னர் ஒவ்வொன்றையும் மேலும் சிறு பகுதிகளாகப் பிரித்து, மெல்லிய சடைகளாகப் பின்னி விடுங்கள். அப்படியே இரவு முழுவதும் விட்டு விடுங்கள். அடுத்த நாள் இதனை ஒவ்வொன்றாக பிரித்து விட்டால், லேசான சுருள்கள் பார்க்க அழகாக இருக்கும்.

    செய்முறை - 2 தலையில் பெரிய 'ஹெட் பாண்ட்' போட்டுக் கொள்ளுங்கள். பிறகு சிறு சிறு பகுதியாக கூந்தலைப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக சுருட்டுங்கள். அவை கலைந்துவிடாதவாறு ஹேர் பின் கொண்டு பொருத்துங்கள். இந்த நிலையில் தலைமுடி சற்று ஈரப்பதமுடன் இருப்பதற்காக கூந்தல் ஸ்பிரே பயன்படுத்தலாம். மறுநாள் காலையில் ஹேர்பின்களை நீக்கிவிட்டு, லேசாக முடியை பிரஷ் செய்யுங்கள்.

    செய்முறை - 3 நீளமான கூந்தலில் சுருள் அலங்காரம் செய்வதற்கு 'ரெடிமேட் கர்லிங் ஸ்டிக்'குகளை உபயோகிக்கலாம். தலைமுடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை கர்லிங் ஸ்டிக் வைத்து சுருட்டி வைக்கவும். இவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம். மறுநாள் காலை தலைமுடியை பிரித்து விட்டு பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் வாரிவிடவும்.

    குறிப்பு: இவ்வாறு அலங்காரம் செய்யும்போது கூந்தலில் எண்ணெய் பூசக்கூடாது. தலையில் ஹேர் சீரம் தடவிக் கொண்டால், சுருள்கள் நீண்ட நேரம் இருக்கும். இவ்வாறு அலங்கரித்த சுருள் அமைப்பு 3 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும்.

    • குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
    • தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும்.

    'நம்மை முதலில் பார்க்கும்போது, அடுத்தவர்களுக்குத் தோன்றும் எண்ணம் தான் நிலையானது' என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.

    குறைவான, அழகான மேக்கப்புடன், ஆர்ப்பாட்டம் இல்லாத, முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம் நீங்கள் சிறந்த தோற்றம் பெற்று விளங்க மிகவும் முக்கியமானதாகும்.

    நீங்கள் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து கொள்ளக்கூடிய மூன்று எளிய கூந்தல் அலங்காரங்களை உங்களுக்காகத் தேர்வு செய்து வழங்குகிறோம்.

    * கொண்டை ( ஸ்லீக் லோ பன்)

    கொண்டை, அலுவலக நோக்கிலான உடைகளுடன் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய கூந்தல் அலங்காரம். ஏனெனில் இது சிக்கல் இல்லாதது மற்றும் காற்றில் பறக்கும் முடியையும் கட்டுப்படுத்துகிறது. கழுத்து அளவில் தாழ்வாகக் கொண்டை அமைத்துக்கொள்வது, சிக்கென, நவீனத்தன்மையோடு இருக்கும். அதே நேரத்தில் தொழில்முறை தன்மையையும் கொண்டிருக்கும்.

    இந்த தோற்றம் பெற...

    நல்ல சீப்பு கொண்டு தலைமுடியை வாரி, தலை முடி அனைத்தையும் ஒன்றாக்கி, உங்கள் கழுத்து அளவில் குதிரை வாலாக அமைத்துக்கொள்ளவும். இந்த குதிரை வால் பின்னலைச் சுருட்டி கொண்டையாக்கி, 'பின்' குத்திக்கொள்ளவும். சிடுக்கு உள்ள முடி எனில், செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி சீராக்கி கொள்ளவும்.

    * குதிரை வால் (போனி டெயில்)

    சரியான முறையில் அமைத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு நேர்காணலுக்குக் குதிரை வால் கூந்தல் அலங்காரம் மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காரத்திற்கு நேர்த்தியான தோற்றம் தேவை. ஆன்டி பிரிஸ் கிரீம் (anti frizz cream) அல்லது ஸ்டலிங் பொருள் மூலம் இதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

    இந்த தோற்றம் பெற...

    உங்கள் தலைமுடியை நேராக்கி, தலைமுடி முழுவதும் ஆன்டி பிரஸ் கிரீம் தடவிக்கொள்ளவும். தலைமுடியை மொத்தமாக இறுகப்பற்றி குதிரை வாலாக்கி, உங்களுக்கு விருப்பமான உயரத்தில் அதை சுற்றி இறுக்கமாக்கிக் கொள்ளவும். உங்கள் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து கொஞ்சம் முடி எடுத்து, அதை கூந்தல் அலங்காரத்தைச் சுற்றி அமைத்து நேர்த்தியான தோற்றத்தை உண்டாக்கிக் கொள்ளவும்.

    * முன்பக்க தலைமுடி (டிவிஸ்டட்)

    இந்த கூந்தல் அலங்காரம் மிகவும் நேர்த்தியாகத் தோன்றக்கூடியது, உடனடியாக தொழில்முறை தோற்றம் தரக்கூடியது. இந்த எளிதான கூந்தல் அலங்காரத்துடன், கண் அலங்காரம் மற்றும் நியூட் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டால் இன்னும் அசத்தலாக இருக்கும்.

    இந்த தோற்றம் பெற...

    உங்கள் தலைமுடியை டிரையர் கொண்டு நன்றாகக் காய வைத்து, கீழ்ப்பகுதியில் சுருள் முடியை உருவாக்கிக் கொள்ளவும். சீப்பு கொண்டு முன்பக்க முடியை அமைத்து, அதைப் பின்பக்கமாக இழுத்து, 'பின்' குத்திக்கொள்ளவும். செட்டிங் ஸ்பிரே மூலம் 'பினிஷ்' செய்யவும்.

    • ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம்.
    • அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது.

    முடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். நீண்ட நேரம் கூந்தல் அலங்காரம் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் இது முடிக்கு நன்மை செய்யுமா என்பதை இதில் பார்ப்போம்.

    ஹேர் ஜெல் பொருட்கள் உங்கள் கூந்தலை அழகுபடுத்தலாம், ஹேர் ஸ்டைல் கலையாமல் வைத்திருக்க உதவலாம். ஆனால் இதில் ஏராளமான கெமிக்கல்கள் உள்ளன என்பதை பற்றியும் அதனால் வரக்கூடிய பாதிப்புகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    ஹேர் ஜெல்களில் ஆல்கஹால் உள்ளிட்ட நச்சு இரசாயனங்கள் இருக்கிறது. இந்த ஆல்கஹால் உங்கள் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்கி கூந்தலை வறண்டு போகச் செய்து விடும். இதனால் முடிகள் உடைந்து போக வாய்ப்பு உள்ளது.

    இந்த ஹேர் ஜெல்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் கூந்தல் வறண்டு போய் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.

    ஹேர் ஜெல்களில் இருக்கும் இராசயனங்கள் காரணமாக உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, எரிச்சல் போன்ற தொந்தரவுகளை உருவாக்குகிறது.

    ஹேர் ஜெல்லில் இருக்கும் நச்சு இராசயனங்களால் உங்களின் கூந்தல் பொலிவிழந்து கூந்தல் நிறமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக சீக்கிரமே நரைமுடி பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர்.

    அளவுக்கு அதிகமாக ஹேர் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. அது உங்கள் கூந்தலை பாதிக்க வாய்ப்புள்ளது. முடிகளில் மட்டுமே ஹேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வேர்க்கால்களில் படும் படி எப்போதும் அப்ளை செய்யக் கூடாது. உங்கள் கூந்தலுக்கு தகுந்த ஹேர் ஜெல்லை தேர்ந்தெடுப்பது அவசியம்.

    ×