என் மலர்

  அழகுக் குறிப்புகள்

  முடி வளர்ச்சிக்கு முக்கியமான ஸ்கால்ப்பை பராமரிப்பது எப்படி?
  X

  முடி வளர்ச்சிக்கு முக்கியமான ஸ்கால்ப்பை பராமரிப்பது எப்படி?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும்.
  • இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்.

  சீரான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு 'ஸ்கால்ப்' எனப்படும், தலைப்பகுதியில் இருக்கும் சரும அடுக்கை சுகாதாரமான முறையில் பராமரிப்பது முக்கியம். ஸ்கால்ப் பகுதியில் மயிர்க்கால்கள், செபேசியஸ் எனும் எண்ணெய் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து உற்பத்தியாகும் வியர்வை மற்றும் எண்ணெய்யுடன் காற்றில் இருக்கும் தூசிகள் கலந்து உருவாகும் அழுக்கு, ஸ்கால்ப் முழுவதும் படியும். இதை அவ்வப்போது சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் கிருமித் தொற்று, தலைமுடி வறட்சி, முடி உதிர்வு, பொடுகு, பேன் தொல்லை, தோல் தடிப்பு, அழற்சி, பூஞ்சைத் தொற்று, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும். இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம். அவை:

  ரசாயனம் இல்லாத ஷாம்பு: ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் செபேஷியஸ் சுரப்பியில் சுரக்கும் இயற்கையான எண்ணெய், தலைமுடி வறட்சி அடையாமல் பளபளப்பாக இருக்க உதவும். ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருக்கும் சல்பேட், இந்த எண்ணெய்யை நீக்கி வறட்சியை உண்டாக்கும். பாரபின் வீக்கம், அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, நாம் பயன்படுத்தும் ஷாம்பு இந்த எண்ணெய்யை முற்றிலும் நீக்கக் கூடிய ரசாயனங்கள் இல்லாமலும், மென்மையாகவும், ஸ்கால்ப் பகுதிக்கு நீரேற்றம் அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஷியா பட்டர் கலந்த ஷாம்பு இதற்கு உதவும்.

  ஸ்கால்ப்பை சுத்தப்படுத்துதல்: நாம் வெளியில் செல்லும்போது சுற்றுச்சூழல் மற்றும் வாகனங்கள் மூலம் வரும் மாசு, இறந்த சரும செல்கள், அழுக்கு போன்றவை ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய்யுடன் கலந்து சருமத் துளைகளை அடைத்துவிடும். இது ஸ்கால்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகரித்து, நோய்த்தொற்றை உண்டாக்கும். இதைத் தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை தலைக்கு குளித்து ஸ்கால்ப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

  புற ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாத்தல்: முகம், கை, கால்களைப் போல ஸ்கால்ப்பும் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பாதிக்கப்படும். எனவே, வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது தலைப்பகுதியை மூடியவாறு செல்வது நல்லது. ஸ்கால்ப்புக்கு தனியாக தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.

  'ஸ்கால்ப்' ஆரோக்கியத்தை அதிகரிக்கும் 'மாஸ்க்' : மரச்செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய்யை மிதமாக சூடுபடுத்தி ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு விரல் நுனியால் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும். 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் நன்றாகக் கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவவும். பின்னர் ஸ்கால்ப் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யவும். 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு, 1 முட்டை, ½ கப் தயிர், இவை எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விரல் நுனிகள் மூலம் எடுத்து ஸ்கால்ப் முழுவதும் தடவவும். பின்பு, சூடான தண்ணீரில் நனைத்துப் பிழிந்த துண்டை தலையை மூடியவாறு கட்டிக்கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.

  Next Story
  ×