search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு மேலாண்மை"

    • கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (முழு நேரம்) சேர விண்ணப்பங்கள் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 28 ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 22 ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 22 ந்தேதிக்குள் முதல்வா், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நிலையம், சாய்பாபா காலனி, கோவை என்ற அலுவலக முகவரிக்கு கூரியா் அல்லது பதிவுத்தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு வேளாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும்.
    • அத்தியாவசிய பயிற்சி என்பதால், மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

    திருப்பூர்:

    கூட்டுறவு சங்கங்களில் பணி புரிய, இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.இது குறித்து திருப்பூர் இணைப்பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2022 - 23-ம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான (முழு நேரம்) விண்ணப்பங்கள் ஜூலை, 28ந் தேதி வரை கோவை ராமலிங்கம் கூட்டுறவு வேளாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும்.

    விண்ணப்பத்தினை நேரில் சென்று,100 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்தவர் இப்பயிற்சியில் சேரலாம்.அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். குறைந்தபட்ச கல்வி தகுதி, பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் கூட்டுறவு வேளாண்மை நிலைய முதல்வர் என்ற முகவரிக்கு கூரியர், பதிவு தபால் வாயிலாக மட்டும் அனுப்ப வேண்டும். ஆகஸ்டு 1-ந் தேதி மாலை 5:30 மணிக்குள், விண்ணப்பங்கள் (இணைப்புகளுடன்) சமர்ப்பிக்க வேண்டும். இந்த பட்டய பயிற்சியானது கூட்டுறவு சங்கங்களில் பணியில் சேருவதற்கு அத்தியாவசிய பயிற்சி என்பதால், மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    சாத்தூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாத்தூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய விபரம், தங்கத்தை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். 

    இந்த பயிற்சியை முடித்தவர்கள் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரண கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிற்சி பெறும் வகையில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 

     பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரங்கள்). இந்த பயிற்சியில் சேருவ தற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18. அதிக பட்ச வயது வரம்பு இல்லை.  ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சியில் சேரலாம். இதற்கான கட்டணம் ரூ. 4 ஆயிரத்து 543 ஆகும். 

    பயிற்சி பெறும் அனைவருக்கும் ரூ. 500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டாளர் பெட்டி) இலவசமாக வழங்கப்படும். 

    மேலும் விவரங்களுக்கு முதல்வர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,  சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி. டெப்போ எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 8807159088 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×