search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் போனஸ்"

    • பொதுச்செயலாளர் ராமகி ருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் நேற்று குமரன் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமகி ருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைச்செயலாளர் தங்கராஜ், மயில்சாமி, துணைத்தலைவர் காயத்ரி செந்தில், கதிரேசன், ஜீனா முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பனியன் தொழிலா ளர்களுக்கு 1&1&2022 முதல் கட்டிங், டெய்லர், அயர்ன், பேக்கிங், சிங்கர், நிட்டிங், மிஷின் தொழிலாள ர்களுக்கு சம்பளம் ரூ.480.35, செங்கிங் தொழிலா ளர்களுக்கு ரூ.364.36, லேபிள் தொழிலாளர்களுக்கு ரூ.349.03, கை மடி ரூ.318.05, டெமேஜ் ரூ.318.40, அடுக்குதல் ரூ.287.40, லோக்கல் மெஷின் பிரிவு ரூ.461.91 வழங்க வேண்டும். இந்த சம்பளத்தை விட நடைமுறையில் டைம்ரேட், பீஸ்ரேட் பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதலாக சம்பளம் பெற்று வந்தால், 5 சதவீதம் உயர்வு கேட்டு பெற வேண்டும். தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனைத்து பனியன் நிறுவனங்களிலும் 10 நாட்களுக்கு முன்பாகவே கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவ விடுப்பு பெறுவதற்கு பனியன் தொழிலாளர்களுக்கு திருப்பூரில் 2 லோக்கல் அலுவலகம் மட்டும் செயல்படுவதால் அவினாசி, காங்கேயம் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் காங்கேயம் மற்றும் அவினாசி பகுதியில் இ.எஸ்.ஐ. லோக்கல் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • துணைத் தலைவா் கே.எம்.இசாக் கொடியேற்றினாா். பொதுச் செயலாளா் என்.சேகா் வேலை அறிக்கை வாசித்தாா்.
    • பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

     திருப்பூர்:

    ஏ.ஐ.டி.யூ.சி. பனியன் பேக்டரி லேபா் யூனியன் 41-வது மகாசபைக் கூட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.எம்.இசாக் கொடியேற்றினாா். பொதுச் செயலாளா் என்.சேகா் வேலை அறிக்கை வாசித்தாா். பொருளாளா் எஸ்.செல்வராஜ் வரவு- செலவு அறிக்கை வாசித்தாா். ஏஐடியூசி. மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி, மாவட்ட பொருளாளா் பி.ஆா். நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டம் முழுவதும் பனியன் தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்னதாகவே கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு முறையாக போனஸ் வழங்கப்படுகிறதா என்பதை, தொழிற்சாலை ஆய்வாளா்களும், மாவட்ட நிா்வாகமும் கவனிக்க வேண்டும். அப்படி கிடைக்காவிட்டால் தொழிலாளா்கள் தொழிற்சங்கத்தை இணையத்தில் அணுகலாம். நூல் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். நூல் விலையை குறிப்பிட்ட காலம் வரை உயராமல் பாா்த்துக்கொள்ள மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பனியன் தொழிற்சாலைகளில் சுத்தமான குடிநீா், உணவு அருந்துமிடம், ஓய்வறை, மருத்துவ முதலுதவி, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாா் பெட்டி உள்ளிட்ட சட்டப்படியான வசதிகள் எதுவும் அமலில் இல்லை. தொழிற்சாலை ஆய்வாளா்கள், தொழிலாளா் நலச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பொது செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் ராஜாமணி, துணை தலைவர்கள்
    • திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள ரோடுகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் மற்றும் பொது தொழிலாளர் (எச்.எம்.எஸ்.,) சங்க நிர்வாக குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். பொது செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் ராஜாமணி, துணை தலைவர்கள் ஜெகநாதன், ரத்தினமூர்த்தி, துரைசாமி, முருகேசன், தனபால், செயலாளர்கள் துரைசாமி, கருப்புசாமி, முத்துகிருஷ்ணன், கிருஷ்ணதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கடந்தாண்டை விட நடப்பாண்டு 2 முதல் 5 சதவீதம் வரை போனஸ் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். அக்டோபர் 1 -ந் தேதி சம்பளத்துடன் போனஸ் வழங்க வேண்டும். தொழில்களின் தற்கால பிரச்சினைக்காக சென்ற ஆண்டு முழுமையும் பணி செய்துள்ள தொழிலாளர்களுக்கு காரணம் சொல்லி காலதாமதப்படுத்திடக்கூடாது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள ரோடுகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×