search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் கடந்த ஆண்டை விட கூடுதலாக தொழிலாளர்களுக்கு போனஸ் - பனியன் தொ.மு.ச. கூட்டத்தில் தீர்மானம்
    X

    பனியன் தொ.மு.ச. கூட்டம் நடைபெற்ற காட்சி.

    தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் கடந்த ஆண்டை விட கூடுதலாக தொழிலாளர்களுக்கு போனஸ் - பனியன் தொ.மு.ச. கூட்டத்தில் தீர்மானம்

    • பொதுச்செயலாளர் ராமகி ருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் நேற்று குமரன் சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமகி ருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைச்செயலாளர் தங்கராஜ், மயில்சாமி, துணைத்தலைவர் காயத்ரி செந்தில், கதிரேசன், ஜீனா முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பனியன் தொழிலா ளர்களுக்கு 1&1&2022 முதல் கட்டிங், டெய்லர், அயர்ன், பேக்கிங், சிங்கர், நிட்டிங், மிஷின் தொழிலாள ர்களுக்கு சம்பளம் ரூ.480.35, செங்கிங் தொழிலா ளர்களுக்கு ரூ.364.36, லேபிள் தொழிலாளர்களுக்கு ரூ.349.03, கை மடி ரூ.318.05, டெமேஜ் ரூ.318.40, அடுக்குதல் ரூ.287.40, லோக்கல் மெஷின் பிரிவு ரூ.461.91 வழங்க வேண்டும். இந்த சம்பளத்தை விட நடைமுறையில் டைம்ரேட், பீஸ்ரேட் பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதலாக சம்பளம் பெற்று வந்தால், 5 சதவீதம் உயர்வு கேட்டு பெற வேண்டும். தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனைத்து பனியன் நிறுவனங்களிலும் 10 நாட்களுக்கு முன்பாகவே கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவ விடுப்பு பெறுவதற்கு பனியன் தொழிலாளர்களுக்கு திருப்பூரில் 2 லோக்கல் அலுவலகம் மட்டும் செயல்படுவதால் அவினாசி, காங்கேயம் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் காங்கேயம் மற்றும் அவினாசி பகுதியில் இ.எஸ்.ஐ. லோக்கல் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×