search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு துணைத் தலைவர்"

    • மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • இளையராஜாவுக்கு, மத்திய இணை மந்திரி எல்.முருகன் சால்வை அணிவித்து வாழ்த்து.

    விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். 

    பாராளுமன்றத்தில் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் அவர் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்ற பிறகு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது அழைப்பின்பேரில் டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இளையராஜா சந்தித்தார். 

    முன்னதாக பாராளுமன்ற அலுவலகத்தில் இளையராஜாவிற்கு சால்வை அணித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட, இசைஞானி இளையராஜா சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று தமது டுவிட்டர் பதிவில், மந்திரி எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.  

    இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை மந்திரி முரளிதரனும் உடன் இருந்தார்.

    • பழமையான மதிப்புகளைப் பாதுகாக்க ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம்.
    • சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை முக்கியம்.

    பகவத் கீதையின் போதனைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஸ்ரீல பிரபுபாதர் குறித்த புத்தக வெளியீட்டு விழா குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது:

    ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகிய உலகளாவிய விழுமியங்களை இந்திய நாகரிகம், நிலைநிறுத்துகிறது. இந்தப் பழமையான மதிப்புகளைப் பாதுகாக்கவும் பரப்பவும் ஆன்மீக மறுமலர்ச்சி அவசியம்.

    சிறந்த துறவிகள் மற்றும் ஆன்மீக குருக்களிடமிருந்து இந்திய இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். சிறந்த மனிதர்களாக மாற ஒழுக்கம், கடின உழைப்பு, பொறுமை மற்றும் கருணை ஆகியவை முக்கியம்.

    ஆன்மிகம் நமது மிகப் பெரிய பலம்,பண்டைய காலங்களிலிருந்து ஆன்மீகமே நமது தேசத்தின் ஆன்மாவாகவும், நமது நாகரிகத்தின் அடித்தளமாகவும் உள்ளது.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நெறிமுறைகள்அடிப்படையில் ஒரு லட்சிய வாழ்க்கையை நடத்த மக்களை வழிநடத்தும் கையேடுகளாக நமது வேதங்கள் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நுண்ணறிவுத் தீர்வுகளை வழங்குகிறது.

    இந்தியா பக்தி பூமி, இந்தியர்களின் நாடி, நரம்புகளில் பக்தி பின்னிப் பிணைந்துள்ளது. இந்தியாவின் பல ரிஷிகள், முனிவர்கள் மற்றும் ஆச்சார்யர்கள், மதச்சார்பற்ற, உலகளாவிய வழிபாட்டு முறையின் மூலம் மக்களை உயர்த்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • அரசியல் சட்ட விதிமுறைகளால் ஒரு மொழியை பாதுகாத்து விட முடியாது.
    • கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.

    பெங்களூருவில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது:

    சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும்.

    அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசுஉதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும், ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது. குடும்பம் குடும்பமாக, சமுதாய அளவில் மற்றும் கல்வி நிறுவனங்களால் தான் அந்த மொழி உயிர்ப்புடன் திகழும். சமஸ்கிருதம் உள்ளிட்ட நமது செம்மொழிகளைப் பாதுகாத்து, அதனை பரவச் செய்வதற்கு, தொழில்நுட்பம் ஏராளமான வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது.

    பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.வேதம் ஓதுவதை பதிவு செய்வதோடு, பண்டைக்கால சமஸ்கிருத கட்டுரைகளின் அர்த்தம் மற்றும் முக்கியத்துவத்தை புத்தகங்களாக வெளியிடுவது தான், சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும்.

    இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்துகொள்ள சமஸ்கிருதம் நமக்கு உதவுகிறது. இந்தியா குறித்து அறிந்து கொள்ள ஒருவர் சமஸ்கிருதத்தை கற்பது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆகஸ்ட் 12 வரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
    • கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.

    பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர் நேற்று மாநிலங்களவை அவைத்தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.அப்போது பேசிய வெங்கையா நாயுடு, ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் வேலை பார்க்கும் அனைத்த ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைபோல் மழைக்காலத் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அலுவல் நேரங்களில் உறுப்பினர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிவிற்கு பிறகும் பாராளுமன்ற வளாகங்கள் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்கால கூட்டத் தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ×