என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

(கோப்பு படம்)
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி தொடக்கம்- வெங்கையா நாயுடு

- ஆகஸ்ட் 12 வரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
- கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர் நேற்று மாநிலங்களவை அவைத்தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.அப்போது பேசிய வெங்கையா நாயுடு, ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வேலை பார்க்கும் அனைத்த ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதைபோல் மழைக்காலத் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அலுவல் நேரங்களில் உறுப்பினர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிவிற்கு பிறகும் பாராளுமன்ற வளாகங்கள் முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்கால கூட்டத் தொடர் முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.