search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் மந்திரி"

    ராகுல் காந்தி குறித்து குஜராத் மந்திரி மந்திரி கன்பத் கூறிய கருத்து காங்கிரஸ் மத்தியில் சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது.
    ஆமதாபாத்:

    குஜராத் மாநில பா.ஜனதா மந்திரி கன்பத் வசவா நேற்று சூரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது, ராகுல் காந்தியை சிவனின் அவதாரம் என காங்கிரசார் அழைப்பதை கிண்டல் செய்து பேசினார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘ராகுல் காந்தி சிவனின் ஒரு அவதாரம் என காங்கிரசார் கூறுகிறார்கள். மக்களை காப்பாற்ற சிவன் விஷம் அருந்தினார். அதைப்போல காங்கிரசாரும், ராகுல் காந்தியை ½ லிட்டர் (500 மில்லி) விஷம் அருந்தச்செய்ய வேண்டும். அதில் அவர் உயிரோடு இருந்தால், ராகுல் காந்தி உண்மையிலேயே சிவனின் அவதாரம்தான் என நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.



    இது சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி பற்றிய இந்த கருத்து துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய குஜராத் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் தோஷி, இது பா.ஜனதாவின் உண்மையான குணநலன்களை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
    பாராளுமன்ற தேர்தலை தள்ளி வைத்துவிட்டு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று குஜராத் மூத்த மந்திரி பேசினார். #PulwamaAttack #GanpatSinghVasawa #LokSabhaElection
    ஆமதாபாத்:

    காஷ்மீரில் துணை ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில பா.ஜனதா மூத்த தலைவரும், அம்மாநில வனம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியுமான கணபத்சிங் வாசவா, பாகிஸ்தானுக்கு எதிராக பரபரப்பாக பேசி உள்ளார். பாராளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கவும் அவர் கோரியுள்ளார். ஆமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    பாகிஸ்தானுக்கு நமது ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று 125 கோடி இந்தியர்களும் விரும்புகிறார்கள்.

    வீரர்கள் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. பழி வாங்குவதற்கான நேரத்தையும், இடத்தையும் தாங்கள் முடிவு செய்வோம் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை கூறியுள்ளது. எனவே, நிச்சயம் பழி வாங்குவார்கள்.

    இதற்காக, பாராளுமன்ற தேர்தல் 2 மாதங்கள் தள்ளி போனாலும் நல்லதுதான். ஆனால், பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும். தேர்தலை தள்ளி வையுங்கள். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துங்கள். இங்கு தேர்தல் நடப்பதற்கு முன்பு, பாகிஸ்தானில் ‘இரங்கல் கூட்டம்’ நடக்கும் அளவுக்கு நமது பதிலடி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PulwamaAttack #GanpatSinghVasawa #LokSabhaElection 
    ×