search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமமக்கள்"

    • பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
    • ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக இடையிறுப்பு பகுதியில் பல மணிநேரமாக பதற்றமாக காணப்பட்டது.

    மெலட்டூர்:

    மெலட்டூர் அருகே உள்ள இடையிருப்பு வருவாய் கிராமத்தில் பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கிரா மமக்கள், வருவாய்துறை. மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    பாபநாசம் மண்டல துணை தாசில்தார் விவேகானந்தன்,பொதுப்ப ணித்துறை உதவி பொறியாளர் செல்வபாரதி, பாபநாசம் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், இளமாறன் மற்றும் கிராமமக்கள் முன்னிலையில் வட்ட அளவையர்கள் மம்தாபீவி, அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சர்வே செய்யப்பட்டது பின்னர் பாப்பா வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    உடன் வருவாய்ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி மற்றும் வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் கிராமமக்கள் பலர் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக இடையிறுப்பு பகுதியில் பல மணிநேரமாக பதற்றமாக காணப்பட்டது. பதற்றத்தை தணிக்க பாபநாசம், மெலட்டூரை சேர்ந்த போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும், பல்லடத்தில் 1-வது வார்டுக்கு இச்சிப்பட்டியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற பார்கள் மூடப்பட்டன.

    பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

    கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்படி 4 மையங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது தெரிவித்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன்உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×