search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிடுகிடு"

    • கடும் பனிப்பொழிவு-முகூர்த்தம் காரணமாக உயர்வு
    • ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி,காவல் கிணறு,புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லி கைப்பூவும் வருகின்றன.

    சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.

    இங்கிருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தி ருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ள தால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது.

    தோவாளை சந்தையில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.1750-க்கும் விற்கப்பட்டது.அரளிப் பூ கிலோ ரூ.250, சேலம் அரளி ரூ.220, சம்பங்கி ரூ.125-க்கு விற்கப்பட்டன.

    மஞ்சள் கேந்தி ரூ.60, சிகப்பு கேந்தி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.150, பட்டர் ரோஸ் ரூ.150,கோழிப்பூ ரூ.50, துளசி ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு பூக்களின் வரத்து குறைவும், அதிக அளவிலான முகூர்த்த ங்கள் நாளை இருப்பதுமே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×