search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் ஆணையர்"

    • சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    • அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு.

    சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது.
    • பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதால், காவலர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது.

    இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

    குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நியமிக்கும்போதும், பணியைப் பற்றி விவரிக்கும்போதும் காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • 2021ல் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.

    சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சைலேந்திர பாபு பதவிக்காலம் நாளையுடன் நிறைவுபெறும் நிலையில், தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதிய டிஜிபி சங்கர் ஜிவால் 1990-ல் தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். 1993-ல் மன்னார்குடி ஏஎஸ்பி, 1995ல் சேலம் மாவட்ட எஸ்பியாக சங்கர் ஜிவால் பணியாற்றினார்.

    மத்திய போதைப்பொருள் தடுப்படுப்பிரிவு எஸ்.பி மற்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் போன்ற பதவிகளை சங்கர் ஜிவால் வகித்துள்ளார்.

    2008- 2011ம் ஆண்டு வரை உளவுத்துறையில் டிஜஜி மற்றும் ஜஜி-ஆக இருந்தார்.

    2011- 2021ம் ஆண்டு வரை அதிரடிப்படை, ஆயுதப்படைகளிலும், 2021ல் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார்.

    • காவல்துறையின் அனுமதியின்றி நடத்துவதற்கு தடை.
    • ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் நடத்த சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வருகிற 17-ந் தேதி நள்ளிரவு வரை அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை காவல்துறையின் அனுமதியின்றி நடத்துவதற்கு தடைவிதித்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவல்துறையின் அனுமதி பெற 5 நாட்கள் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ×