search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலாண்டு விடுமுறை"

    • 1 முதல் 5-ஆம் வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், 1 முதல் 5-ஆம் வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை பருவ தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.
    • தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து வருகிற 9-ம் தேதி வரையும் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

    மேலும் நாளை (4-ந்தேதி) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, நாளை மறுநாள் 5-ந்தேதி விஜயதசமி, பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. ஆகவே நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்களாகும்.

    இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் ஏற்காட்டுக்கு கார், சுற்றுலா வாகனங்கள், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இன்று காலை கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். லேசான சாரல் மழையும், பனியும், குளுமையான சீதோஷ்ண நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர்.

    ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்யும் சூழல் ஏற்பட்டது.

    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்நிலையில், தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்ததும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 6 - 8ம் தேதி வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மேலும், தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடப்பதாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும்.
    • காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடப்பட்டு, பின்னர் அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலைநாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் (அடுத்த மாதம்) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடப்பட்டு, பின்னர் அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அக்டோபர் 9-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டு 10-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அட்டவணைப்படி அக்டோபர் 6-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தற்போது வரை வாய்வழி அறிவுறுத்தலாகத்தான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அப்படி வெளியிடப்படும்போதுதான் இது உறுதிப்படுத்தப்படும்' என்றனர்.

    ×