search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்திகிராம பல்கலைக்கழகம்"

    • பொறியியல் துறையில் சுமார் 30 ஆண்டுகளாக காமக்கோடி பணியாற்றி வருகிறார்.
    • காமக்கோடிக்கு பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காலியாகவே உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித்சிங் காந்தி கிராம பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தராக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனரும், பேராசிரியருமான காமக்கோடி காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல், பொறியியல் துறையில் சுமார் 30 ஆண்டுகளாக காமக்கோடி பணியாற்றி வருகிறார். அப்துல்கலாம் டெக்னாலஜி இன்னோவேஷன் நேஷனல் பெலோஷிப், ஐ.இ.எஸ்.ஏ. டெக்னாலஜி தொலைநோக்கு விருது, ஐ.பி.எம். நல்லாசிரியர் விருது, டி.ஆர்.டி.ஓ. அகாடமி சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க விருதுகளை பெற்றவர்.

    மேலும் அசோஷியேசன் ஆப் கம்ப்யூட்டிங் அண்டு கம்யூனிகேசன் சொசைட்டி வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். துணைவேந்தராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள காமக்கோடிக்கு பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காந்திகிராம பல்கலை க்கழகத்தின் வேளாண் அறிவியல் மைத்துக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் மண்டல அளவில் 2ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது.
    • விவசாயிகளின் வருானத்தை உயர்த்தவும் செயல்விளக்கம், ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை க்கழகத்தின் வேளாண் அறிவியல் மைத்துக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் மண்டல அளவில் 2ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், புதுச்சேரி, யூனியன் பிரதேசத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையங்களை ஐதராபாத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி பண்பாட்டு நிறுவனம் கண்காணித்து வருகிறது.

    இந்நிறுவனமும் தமிழ்நாடு வேளாண் பல்கலையும் இணைந்து வேளாண் அறிவியல் மைய செயல்பாடு கள் குறித்து ஆய்வு கூட்டத்தை கோவையில் நடத்தின.

    இதில் காந்திகிராம பல்கலையும், வேளாண் அறிவியல் மையத்துக்கு மண்டல அளவில் 2-ம் இடம் கிடைத்துள்ளது. விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருானத்தை உயர்த்தவும் செயல்விளக்கம், ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.

    மையத்தின் செயல்பா டுகள், விவசாயிகளின் வெற்றி கதைகளை ஆவணப்படுத்துதல், சுழல் நிதி உற்பத்தி போன்ற வற்றுக்காக இந்த வருது வழங்கப்பட்டது. வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி இதற்கான விருதினை வழங்கினார்.

    வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வெங்கட சுப்பிரமணியன், வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
    • பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை வழங்கினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர்.

    முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை வழங்கி வரவேற்றார்.

    • உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
    • டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா, உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

    காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒழுங்குபடுத்தும் விழுமியங்களாக உள்ளன.

    வட இந்தியர் அனைவரும் தமிழைக் கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி.

    மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண்.

    உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

    பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் உள்ளன என தெரிவித்தார்.

    டாக்டர் பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா, உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    • உயரமான அளவில் கட்சிக்கொடி கட்ட ஒருதரப்பினர் முயன்றனர். இதனால் அங்கு வந்த போலீசார் கட்சிக்கொடி கட்டக்கூடாது என தெரிவித்தனர்.
    • இருதரப்பினரும் கொடிகளை அகற்றுமாறு போலீசார் எச்சரித்தனர்.

    சின்னாளபட்டி:

    காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையிலும், ஹெலிபேடு தளத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரையிலும் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சார்பில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

    இன்று மேலும் உயரமான அளவில் கட்சிக்கொடி கட்ட ஒருதரப்பினர் முயன்றனர். இதனால் அங்கு வந்த போலீசார் கட்சிக்கொடி கட்டக்கூடாது என தெரிவித்தனர். இருதரப்பினரும் கொடிகளை அகற்றுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது யார் முதலில் கொடியை அகற்றுவது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து போலீசாரே கொடியை அகற்ற முயன்றதால் அதனை தடுக்க முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசார் கீழே விழும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து அனைத்து கொடிகளையும் அகற்ற உத்தரவிட்டார். அதன் பின் கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. விழாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சியினர் யாரும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தி தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×